இலங்கையில் சுற்றி பார்க்க இவ்வளவு விஷயம் இருக்கா? செலவும் கம்மி தான்!

Srilanka Tourism: இலங்கை நாடு சுற்றுலாவிற்கு பெயர் பெற்ற ஒரு இடமாக உள்ளது. பல்வேறு வரலாற்று அதிசயங்களை கொண்டு காண்போரை பிரமிக்க வைக்கிறது.  

Written by - RK Spark | Last Updated : May 27, 2024, 06:21 AM IST
  • இயற்கையின் அதிசயங்களை பெற்றுள்ள இலங்கை.
  • மனித கலாச்சாரத்தின் செழுமைக்கும் சான்றாக உள்ளது.
  • மலைகள் மற்றும் காடுகளால் சூழ்ந்துள்ளது.
இலங்கையில் சுற்றி பார்க்க இவ்வளவு விஷயம் இருக்கா? செலவும் கம்மி தான்! title=

இந்தியப் பெருங்கடலில் இருக்கும் மிகப்பெரிய தீவு இலங்கை ஆகும். இது தென்மேற்கில் மாலத்தீவுகளுடனும் வடமேற்கில் இந்தியாவுடனும் கடல் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. பல்வேறு இயற்கை அதிசயங்களை கொண்டுள்ள நாடு இலங்கை. அங்குள்ள பல்வேறு இடங்கள் பல வரலாற்று பதிவுகளை நமக்கு கொடுக்கிறது. உலகில் எந்த நாட்டில் இருந்து இலங்கைக்கு பயணம் செய்தாலும் ஏதாவது ஒரு விஷயம் நிச்சயம் பிடித்து போகும். இங்கு பல்வேறு மொழிகள் மற்றும் கலாச்சாரங்களை கொண்டுள்ளது. இலங்கைத் தமிழர்கள் வட இலங்கையில் அதிகம் வாழ்கின்றனர். மேலும் மூர்ஸ், இந்தியத் தமிழர்கள், பர்கர்கள், மலாய்க்காரர்கள், சீனர்கள் மற்றும் வேதாக்கள் ஆகியோரும் வாழ்ந்து வருகின்றனர். 

மேலும் படிக்க | இரவில் நல்ல தூக்கம் வேண்டுமா? அப்படியானால் இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!

இலங்கையில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள்

கார்ட்மோர் நீர்வீழ்ச்சி: பசுமையான நிலப்பரப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ள கார்ட்மோர் நீர்வீழ்ச்சி கண்களுக்கு விருந்தளிக்கிறது. ஸ்ரீ பாத புனித மலைக்கு அருகாமையில் இருப்பதால் இந்த நீர்வீழ்ச்சி பொதுவாக ஸ்ரீ பாத நீர்வீழ்ச்சி என்று அழைக்கப்படுகிறது. இந்த நீர்வீழ்ச்சி இலங்கையின் அழகை பிரதிபலிக்கிறது. நகரத்தில் இருந்து வெளியேறி அமைதியான காட்சிகளை வழங்குகிறது. ஸ்ரீ பாத நீர்வீழ்ச்சியிலிருந்து பல நூறு மீட்டர் தொலைவில் உள்ள மற்றொரு நீர்வீழ்ச்சி மோரே நீர்வீழ்ச்சி என்று அழைக்கப்படுகிறது. கார்ட்மோர் நீர்வீழ்ச்சிக்கு கீழே அழகிய குளங்கள் அமைந்துள்ளது. இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சாகச பயணிகளுக்கு இது சிறப்பான இடமாக இருக்கும். 

இலங்கை உணவு: இலங்கை வரலாற்று இடங்கள் மற்றும் சுற்றுலா தளங்களை தவிர சுவையான உணவுகளுக்கும் பெயர் பெற்றது. பல காரசாரமான உணவுகளை இலங்கை கொண்டுள்ளது. கொட்டு ரொட்டி என்று அழைக்கப்படும் உள்ளூர் உணவு மற்றும் பால், வெல்லம் சேர்ந்து தயாரிக்கப்படும் உணவு, பாரம்பரிய இனிப்புகளான வத்தலப்பம் மற்றும் கோகிஸ் போன்றவற்றை மறக்காமல் ருசி பார்க்க வேண்டும். 

யாலா தேசிய பூங்கா: இலங்கையில் உள்ள யாலா தேசியப் பூங்கா உலகிலேயே அதிக சிறுத்தைகளை கொண்ட பூங்கா ஆகும். மேலும் இங்கு பல வகையான யானைகள் மற்றும் வெளிநாட்டு பறவைகள் உள்ளன. இங்கு சிறுத்தைகளை திரும்பும் இடம் எங்கும் பார்க்க முடியும். மேலும் மிகப்பெரிய நிலப்பரப்பில் இந்த பூங்கா அமைந்துள்ளதால் சுற்றி பார்க்க ஒருநாள் போதாது.

இயற்கையின் அழகு: கண்டியில் இருந்து எல்லா செல்லும் ரயிலில் பயணம் செய்தால் கீழே இறங்கும் வரை கண்களுக்கு குளிர்ச்சியான இடங்களை பார்க்க முடியும். பசுமையான தேயிலை தோட்டங்கள், பனி சூழ்ந்த மலைகள் மற்றும் பல அருவிகளை கண்டுகளிக்கலாம். 

யானைகள் சரணாலயம்: பின்னவல யானைகள் சரணாலயத்தில் யானைகளை உங்களால் மிக அருகில் பார்க்க முடியும். மற்ற பாரம்பரிய உயிரியல் பூங்காக்கள் போல் இல்லாமல், இங்கு யானைகளின் பாதுகாப்பில் கவனம்  செலுத்தப்படுகிறது. யானைகள் சுதந்திரமாக சுற்றித் திரிவதற்கும் ஏற்றவாறு இந்த இடம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இலங்கை இயற்கை உலகின் அதிசயங்களுக்கும் மனித கலாச்சாரத்தின் செழுமைக்கும் சான்றாக உள்ளது. 

மேலும் படிக்க | ஜிம்மில் எதை செய்யலாம்? எதை செய்யக்கூடாது? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News