இன்றைய (02-07-2018) முக்கிய செய்திகள் ஒரு பார்வை!!

இன்றைய (02-07-2018) முக்கிய செய்திகள் என்னென்ன? கிழ் உள்ள தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளவும்!

Last Updated : Jul 2, 2018, 11:25 PM IST
இன்றைய (02-07-2018) முக்கிய செய்திகள் ஒரு பார்வை!! title=

இன்றைய (02-07-2018) முக்கிய செய்திகள் என்னென்ன? கிழ் உள்ள தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளவும்!

> லாலு குடும்பத்தில் பிளவு? தாயாருக்கு எதிராக ஃபேஸ்புக்கில் பதிவிட்ட மகன்!!

பீகாரில் லாலு யாதவ் குடும்பத்தில் பிளவு ஏற்படக்கூடிய சூழல் உருவாகி உள்ளது என தகவல்கள் தொடர்ந்து வருகின்றன

> உங்களை சுறுசுறுப்பாக வைக்க இதோ ப்ளூ டீ!! தெரிந்துக்கொள்வோம்!!

க்ரீன் டீயை போலவே உடலையும், மூளையையும் சுறுசுறுப்பாக வைக்க ப்ளூ டீ உதவுகிறது

> மைனர் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த நான்கு மைனர் சிறுவர்கள்.

அந்தரங்க வீடியோவை பார்த்துக் கொண்டு சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த நான்கு சிறுவர்கள்

> பிறந்து 6 நாளான குழந்தையை கடத்திய மர்ம பெண் -யார்?

குழந்தையை தடுப்பூசி போடுவதகாக கொண்டுசென்ற அந்த பெண் வெகுநேரம் ஆகியும் திரும்பி வரவில்லை.

> சன்னி லியோன் வாழ்க்கை வரலாறு -விரைவில்

பாலிவுட் பிரபலம் சன்னிலியோன் வாழ்க்கை வரலாற்றினை ZEE5 இணைய பக்கத்தில்  ஜூலை 16 ஆம் தேதி முதல் ஒளிபரப்பவுள்ளது!

"நாடோடிகள் 2" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் & டீசர் வெளியானது -வீடியோ

இன்று "நாடோடிகள் 2" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் டீசரை, நடிகர் சூர்யா வெளியிட்டார். 

> அஸ்ஸாம் வெள்ளப்பெருக்கம்: 30-க்கு அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல்

அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கத்தால் இதுவரை 30-க்கு அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது.

> அரசு ஊழியர்களை காக்கவே துப்பாக்கி சூடு -டிஜிபி பதில் மனு!

ஆட்சியர் அலுவலகத்தின் இருந்த 277 ஊழியர்களை மீட்கவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என உயர்நீதிமன்றத்தில் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் பதில் மனு!

> முதல்வரை விசாரிக்கும் அதிகாரம் லோக் அயுக்தாவுக்கு வழங்க வேண்டும் -ராமதாஸ்

ஊழலில் திளைக்கும் தமிழக அரசு நிர்வாகத்தை ஓரளவாவது சீர் செய்ய வேண்டுமானால் அதற்கு லோக் அயுக்தா அமைப்பு தான் ஒரே தீர்வு என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

> குழந்தை கடத்தல் வதந்தி: வடமாநில இளைஞர் மீது வெறி தாக்குதல்!

குழந்தையை கடத்த வந்ததாக நினைத்து வட மாநில இளைஞகள் மீது வெறி தாக்குதல் நடத்திய பொது மக்கள்!!

> விம்பிள்டன் 2018: இலண்டனில் தொடங்கியது டென்னிஸ் தொடர்.....!!

இன்று முதல் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி தொடக்கம். 

> வெளியானது மோகன்லாலின் டிராமா திரைப்பட டீஸர்!!

வெறும் 27 விநாடிகளை கொண்ட மோகன்லால் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் உருவான டிராமா திரைப்படத்தின் டீஸர் வெளியானது. இதை மோகன்லால் தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ளார்!

> புதிய DDCA தலைவராகிறார் பத்திரிகையாளர் ராஜத் சர்மா!!

டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைர் தேர்தலில் பத்திரிகையாளர் ரஜத் சர்மா சுமார் 54.40% வாக்குகள் ஆதரவாக பெற்று வெற்றி!!

> டெல்லி மாஸ் சூசைட்: மதநம்பிக்கையில் சுயபலியா..?

ஆன்மிக நம்பிக்கையால் தற்கொலையா?: டெல்லி 11 பேர் மர்ம மரண விவகாரத்தில் தொடரும் மர்மம்!

> பிரபல பாடகரின் தந்தையை தாக்கிய கிரிக்கெட் வீரரின் மனைவி!

பிரபல பாடகர் அன்கித் திவாரியின் தந்தையை கிரிக்கெட் வீரர் வினோத் காம்பிளியின் மனைவி தாக்கியதால் பரபரப்பு! 

> தமிழக முதல்வருடன் "மிஸ் இந்தியா" அனுகீரித்தி சந்தித்தார்

இந்திய அழகிக்கான தேர்வு போட்டியில் வெற்றி பெற்ற அனுகிரீத்தி இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

> நீட் தேர்வு: CBSE-க்கு மதுரை ஐகோர்ட் கிளை 4 கேள்விகள்!

நீட் தேர்வு தொடர்பாக மதுரை ஐகோர்ட் கிளை CBSE-க்கு நான்கு கேள்விகள் எழுப்பி உள்ளனர். 

> லோக்பால் அமைப்பு கெடு குறித்து 10 நாட்களில் பதிலளிக்க உத்தரவு!

லோக்பால் அமைப்பதற்கான கெடு குறித்து 10 நாட்களில் தெரிவிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

> SFI மாணவர் அபிமன்யு படுகொலை: கேரளாவில் கல்லூரி வகுப்புகள் புறக்கணிப்பு!

எஸ்.எஃப்.ஐ அமைப்பைச் சேர்ந்த மாணவர் கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்டதைக் கண்டித்து கேரளாவில் அனைத்து கல்லூரிகளிலும் வகுப்புகளை புறக்கணிப்புப் போராட்டம்!

> ஐசிசி ஹால் ஆஃப் பேம் பட்டியலில் ராகுல் டிராவிட்! Watch!

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் ஹால் ஆஃப் பேம் கவுரவ பட்டியலில் முன்னாள் கிர்க்கெட் வீரர் ராகுல் டிராவிட், ரிக்கி பாண்டிங், கிளைர் டெய்லர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

> நட்புனா என்னானு தெரியுமா படக்குழுவின் முக்கிய அறிவிப்பு!

கவின், ரம்யா நம்பீசன் நடித்துள்ள "நட்புனா என்னானு தெரியுமா" படம் வரும் ஜூலை 20ம் தேதி திரைக்கு வருகிறது.

> காரைக்குடி - பட்டுக்கோட்டை இடையே புதிய ரயில் சேவை இயக்கம்!

காரைக்குடி - பட்டுக்கோட்டை அகல ரயில் பாதையில் இன்று முதல் புதிய பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. 

> நீரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்தது இண்டர்போல் 

வங்கி கடன் மோசடியில் ஈடுபட்டு உள்ள நீரவ் மோடிக்கு எதிராக இண்டர்போல் அமைப்பு ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

> மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு! நீர்மட்டம் 60 அடியை எட்டியது!

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழை காரணத்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 60 அடியை எட்டி உள்ளது. 

> டெல்லி: கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு!

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. மாணவர்களும், ஆசிரியர்களும் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர்.

> ஜூன் மாதம் ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ. 95,610 கோடி: ஹஸ்முக் ஆதியா

ஜூன் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி மூலம் ரூ.95,610 கோடி வருமானம் அதிகரித்துள்ளதாக மத்திய நிதித்துறை செயலர் ஹாஸ்முக் ஆதியா தகவல் தெரிவித்தார்.

> 02-07-2018: மாற்றம் இன்றி தொடரும் பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலையில் விற்பனையில் உள்ளது!!

Trending News