உடல் எடையை உடனடியாய் குறைக்க உதவும் 'நெகடிவ் கலோரி உணவுகள்': சாப்பிட்டு பாருங்க!!

Weight Loss Tips: எடை இழப்புக்கு நெகடிவ் கலோரி உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை, கொடுக்கும் ஆற்றலை விட இவற்றை ஜீரணிக்க அதிக ஆற்றல் தேவைப்படுகின்றது என்பதால், இவற்றை சாப்பிடும் போது அதிக கலோரிகள் எரிக்கப்படுகின்றன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 10, 2024, 10:53 AM IST
  • நெகடிவ் கலோரி உணவுகள் நேரடியாக எடை இழப்பை ஏற்படுத்தாது.
  • அவை சமச்சீர் உணவுகளுக்கு மதிப்புகூட்டும் பணியை நன்றாகச்செய்யும்.
  • இந்த உணவுகளைச் சேர்ப்பது உணவில் திருப்தியை அதிகரிக்க உதவும்.
உடல் எடையை உடனடியாய் குறைக்க உதவும் 'நெகடிவ் கலோரி உணவுகள்': சாப்பிட்டு பாருங்க!!

Weight Loss Tips: நம் உடலில் சேர்ந்துள்ள கூடுதல் கொழுப்பை குறைக்கவும், உடல் பருமனை சரி செய்யவும், நாம் பல வித முயற்சிகளை எடுக்கிறோம். இதில் உடற்பயிற்சி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. எனினும், பலருக்கு இதற்கு நேரம் கிடைப்பதில்லை. நாம் உட்கொள்ளும் உணவு நமது உடல் எடையை நேரடியாக பாதிக்கின்றது. அதிக கலோரி உள்ள உணவுகளை உட்கொண்டால் நமது உடல் எடை மளமளவென அதிகரிக்கத் தொடங்கும். நாம் உடல் எடையை குறைக்க சாப்பிடாமல் பட்டினி கிடக்கவேண்டும் என அர்த்மில்லை. சரியான உணவை சரியான முறையில் உட்கொண்டால் நமது உடல் எடையை ஆரோக்கியமான வழியின் குறைக்கலாம். 

Add Zee News as a Preferred Source

நெகடிவ் கலோரி உணவுகள்

எடை இழப்புக்கு நெகடிவ் கலோரி உணவுகள் (Negative Calorie Foods) முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை, கொடுக்கும் ஆற்றலை விட இவற்றை ஜீரணிக்க அதிக ஆற்றல் தேவைப்படுகின்றது என்பதால், இவற்றை சாப்பிடும் போது அதிக கலோரிகள் எரிக்கப்படுகின்றன. எடை இழப்புக்கு உதவக்கூடிய சில சிறந்த நெகடிவ் கலோரி உணவுகளைப் பற்றி இங்கே காணலாம். 

நெகடிவ் கலோரி உணவுகளும் எடை இழப்பும்

நெகடிவ் கலோரி உணவுகள் நேரடியாக எடை இழப்பை (Weight Loss) ஏற்படுத்தாது என்றாலும், அவை சமச்சீர் உணவுகளுக்கு மதிப்புகூட்டும் பணியை நன்றாகச்செய்யும். இந்த உணவுகளைச் சேர்ப்பது உணவில் திருப்தியை அதிகரிக்க உதவும். இது கலோரிக் குறைபாட்டைப் பராமரிப்பதை எளிதாக்குகிறது. உடல் செலவழிப்பதை விட குறைவான கலோரிகளை உட்கொள்வதால், கலோரி பற்றாக்குறையை உருவாகும். இதனால் உடல் ஆற்றலுக்காக சேமிக்கப்பட்ட கொழுப்பைப் பயன்படுத்தத் தூண்டப்படுகின்றது. இந்த வழியில் இது எடை இழப்புக்கு வழிவகுக்கும்.

சிறந்த நெகடிவ் கலோரி உணவுகள்

நெகடிவ் கலோரி உணவுகள் நேரடியாக கொழுப்பைக் கரைக்காவிட்டாலும், அவை ஆரோக்கியமான உணவின் மதிப்புமிக்க கூறுகளாக இருக்கும். குறைந்த கலோரிகள் மற்றும் எடை இழப்புக்கு உதவக்கூடிய சில ஊட்டச்சத்து நிறைந்த நெகடிவ் கலோரி உணவுகளை பற்றி இங்கே காணலாம். 

1. ஆப்பிள்

ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரிடம் இருந்து விலகி இருக்கலாம் என ஒரு கூற்று உள்ளது. ஆப்பிள் உடல் எடையையும் குறைக்க உதவுகிறது. ஆப்பிளில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், இது கொழுப்பை குறைத்து எடையை குறைக்க உதவும்.

2. செலரி

செலரியில் நீர்ச்சத்து அதிகமாகவும் கலோரி குறைவாகவும் உள்ளது. இது புத்துணர்ச்சியூட்டும், திருப்திகரமான சிற்றுண்டியாக இருக்கிறது.

3. கேரட்

கேரட்டை அப்படியே ஒரு திருப்திகரமான சிற்றுண்டியாக உட்கொள்ளாலாம். இது குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்துகளை கொண்டுள்ளது. இதில் அதிக பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இதனால் கண் ஆரோக்கியமும் மேம்படும். 

4. வெள்ளரி

அதன் மிருதுவான அமைப்பு மற்றும் லேசான சுவை, சாலட்களில் அதை பலரது விருப்பமாக்கியுள்ளது. இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. குறைந்த கலோரிகள் கொண்ட இதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிரம்பியுள்ளன.

மேலும் படடிக்க | கவர்ச்சிகரமான தலைமுடியைக் கொடுக்க கீரைகளே ரெடி! அழக்காக்க நீங்க தயாரா?

5. பச்சை இலை காய்கறிகள் / கீரைகள்

கீரை மற்றும் முட்டைக்கோஸ் போன்ற பச்சை இலை காய்கறிகள் நம்பமுடியாத அளவிற்கு குறைந்த கலோரிகளைக் கொண்ட, அதிக ஊட்டச்சத்து கொண்ட உணவுகளாகும். நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் நிறைந்த இவை, தொப்பை கொழுப்பை (Belly Fat) கரைத்து உடல் எடையை குறைக்கும். 

6. பெர்ரி

ஸ்ட்ராபெர்ரி, அவுரிநெல்லிகள், ராஸ்பெர்ரி போன்ற பெர்ரி பழங்கள் சுவையாக இருப்பதோடு, இவற்றில் கலோரிகளும் குறைவாக (Low Calories) இருக்கின்றன. இவற்றில் நார்ச்சத்தும் அதிகமாக இருக்கும். இவற்றை உட்கொள்வதால் திருப்தியான உணர்வு ஏற்படுகின்றது. 

7. தர்பூசணி

தர்பூசணி நீர்ச்சத்து நிறைந்த பழமாக உள்ளது. இதில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கிடைக்கின்றன. இது சிற்றுண்டிகளுக்கான ஏக்கத்தை கட்டுப்படுத்த உதவும்.

8. ப்ரோக்கோலி

ப்ரோக்கோலியில் கலோரி குறைவாகவும், ஊட்டச்சத்துகள் அதிகமாகவும் உள்ளன. இது எடை குறைப்பதற்கும் ஒரு சிறந்த தேர்வாக உள்ளது.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Immunity: தேனுடன் சேர்ந்தால் நெல்லிக்காய் செய்யும் மாயாஜாலம்! அதனுடன் கொஞ்சூண்டு மிளகு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News