பரத் நடிக்கும் 50-வது படம்

பரத் நடிக்கும் 50-வது படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 16, 2022, 05:53 PM IST
  • R.P.பாலா இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடிக்கிறார்
  • நாயகியாக வாணி போஜன் நடிக்கிறார்
  • P.G.முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார்
பரத் நடிக்கும் 50-வது படம்  title=

பரத் நடிக்கும் 50-வது படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. 

ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் பரத். அப்படம் அவருக்குச் சிறந்த அறிமுகப் படமாக இருந்தது. அதற்குப் பின் 4 ஸ்டூடண்ட்ஸ் மலையாளப் படத்தில் நடித்தார். அப்படத்தின் லஜ்ஜாவதி பாடல் மூலம் பட்டியொட்டி எங்கும் அறியப்படும் நடிகர் ஆனார். விஷால் நாயகனாக நடித்த செல்லமே படத்தில் நெகட்டிவ் ரோலில் பெரிய அளவில் கவனம் ஈர்த்தார். அவரின் ஒட்டுமொத்த திரை வாழ்க்கையையும் புரட்டிப் போட்ட படமாக காதல் படத்தைச் சொல்லலாம். பாலாஜி சக்திவேல் பரத்தை அப்படியே முருகன் எனும் கதாபாத்திரத்தில் உருமாற்றி, தமிழ் சினிமாவின் இளம் நாயகர் பட்டியலில் தவிர்க்க முடியாத இடத்தைக் கொடுத்து உலவ விட்டார். 

அதற்குப் பின் முன்னணி இயக்குநர்களின் படங்களில் பரத் நடித்தார். விஷ்ணு வர்தன் இயக்கத்தில் பட்டியல், விஜய் மில்டனின் இயக்கத்தில் அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, கடுகு, திருமுருகன் இயக்கத்தில் எம் மகன், வசந்தபாலன் இயக்கத்தில் வெயில், சீனு ராமசாமி இயக்கத்தில் கூடல் நகர், வி.இசட்.துரை இயக்கத்தில் நேபாளி, விக்ரமன் இயக்கத்தில் சென்னை காதல், ஹரி இயக்கத்தில் சேவல், பேரரசு இயக்கத்தில் பழனி, திருத்தணி, சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஆறுமுகம், சசி இயக்கத்தில் ஐந்து ஐந்து ஐந்து, ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் கில்லாடி எனத் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். அவரது 25-வது படம் ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி. 

மேலும் படிக்க | ‘பீஸ்ட்’டில் விஜய்யின் காஸ்ட்யூம் இதுவா?!

சமீபத்தில் சிம்பா, காளிதாஸ் படங்கள் மூலம் கதைத் தேர்வில் கவனம் செலுத்தி வந்தவர் இப்போது R.P.பாலா இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடிக்கிறார். இப்படம் பரத்தின் 50-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. லூசிஃபர், மரைக்காயர், குருப் உள்ளிட்ட பல படங்களின் தமிழ் மறு ஆக்கத்துக்கு வசனங்கள் மற்றும் பாடல்களை எழுதிய R.P.பாலா இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். நாயகியாக வாணி போஜன் நடிக்கும் இப்படத்தில் விவேக் பிரசன்னா, பிக் பாஸ் புகழ் டேனி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். P.G.முத்தையா ஒளிப்பதிவுப் பணியை மேற்கொள்ள, அஜய் மனோஜ் படத்தொகுப்பு செய்கிறார். மரைக்காயர் படத்தின் மூலம் திரும்பிப் பார்க்க வைத்த ரான்னி ரபேல் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.  

சென்னையில் இன்று இப்படத்தின் பூஜை நடைபெற்றது. தயாரிப்பாளர் தாணு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பூஜையைத் தொடங்கி வைத்தார். 

மேலும் படிக்க |  பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் பாக்கியா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News