தூய்மை பணியாளரான யோகிபாபு - ஏன் தெரியுமா?

நடிகர் யோகிபாபு குறும்படம் ஒன்றில் தூய்மை பணியாளராக நடிக்கிறார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Nov 24, 2022, 04:03 PM IST
  • தமிழின் முன்னணி காமெடி நடிகர் யோகி பாபு
  • ஹீரோ, குணச்சித்திர வேடம் என கலக்குபவர்
  • தற்போது குறும்படத்தில் நடித்திருக்கிறார்
தூய்மை பணியாளரான யோகிபாபு - ஏன் தெரியுமா? title=

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் யோகிபாபு. ஆரம்பத்தில் சிறுசிறு வேடங்களில் நடித்துவந்த யோகிபாபு தனது அசாத்தியமான நடிப்பால் முன்னணிக்கு வந்திருக்கிறார். ஒருகட்டத்தில் வடிவேலு ஒதுங்க, விவேக் இறக்க, சந்தானம் ஹீரோவாக மாற, சூரி, சதீஷின் காமெடி பலருக்கு போர் அடிக்க நகைச்சுவைக்கான வெற்றிடத்தை யோகிபாபு நிரப்பினார். தற்போது அவர் பல படங்களில் நடித்துவருகிறார். வடிவேலுவுடன் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திலும் நடிக்கிறார் யோகிபாபு. தொடர்ந்து காமெடியில் மட்டுமின்றி ஹீரோவாகவும் கலக்கிவருகிறார். அந்தவகையில் அவர் நடித்த மண்டேலா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு தேசிய விருதையும் பெற்றது.

காமெடி, ஹீரோ மட்டுமின்றி குணச்சித்திர வேடங்களிலும் கலக்கிவருகிறார் யோகி. சமீபத்தில் லவ் டுடே படத்தில் இவர் ஏற்றிருந்த கதாபாத்திரமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து அதுபோன்ற கதாபாத்திரங்களிலும் யோகிபாபு நடிக்க வேண்டுமெனவும் ரசிகர்கள் விரும்புகின்றனர்.

இந்நிலையில் Urbaser Sumeet நிறுவனம் மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது தொடர்பாக குறும்படம் தயாரிக்கப்படுகிறது. அதில் யோகிபாபு தூய்மை பணியாளராக நடிக்கிறார். பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்க வேண்டுமென்பதற்கும், சுற்றத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டுமென்பதையும் வலியுறுத்துவிதமாக இந்தப் படம் தயாரிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Yogibabu

மக்களுக்கு அவசியமான குறும்படத்தில் யோகிபாபு நடிப்பதை அடுத்து அவருக்கு பலரும் தங்களது பாராட்டை தெரிவித்துவருகின்றனர். மேலும் அந்தக் குறும்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைபப்டங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.

மேலும் படிக்க | சோதனை மேல் சோதனை... வாரிசுக்கு புதிய பிரச்னை

முன்னதாக, தமிழில் மட்டுமின்றி ஹிந்தியிலும் கால் பதித்திருக்கிறார் யோகிபாபு. ஏற்கனவே ஷாருக்கானுடன் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்திருந்த யோகி தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக் நடிக்கும் ஜவான் படத்திலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | 100 கோடி பாக்ஸ் ஆஃபீஸில் இணைந்த சின்ன பட்ஜெட் படம்! செம ஹேப்பியில் உதயநிதி

மேலும் படிக்க | கமல்ஹாசனுக்கு என்ன ஆச்சு... டாக்டர்கள் சொன்ன அட்வைஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News