கார் விபத்தில் சிக்கிய மற்றொரு பிக்பாஸ் பிரபலம்

பிக்பாஸ் 11 ஆவது சீசன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் நடிகை அர்ஷிகான்.

Written by - ZEE Bureau | Last Updated : Nov 24, 2021, 02:27 PM IST
கார் விபத்தில் சிக்கிய மற்றொரு பிக்பாஸ் பிரபலம்

நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கிய இந்தி பிக்பாஸ் 11 ஆவது சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் நடிகை அர்ஷி கான். இவர் நேற்று டெல்லி சாலையில் சென்றுகொண்டிருந்தபோது கார் விபத்தில் சிக்கியுள்ளார். இதனால் சிறுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த விபத்து (Car Accident) டெல்லியில் உள்ள மாள்வியா நகர் அருகே விபத்து நடந்ததாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. நடிகை அர்ஷி கான் பிக்பாஸ் 11 சீசனில் கலந்துகொண்டு பிரபலமானார், பின்னர் 14 ஆவது சீசன் போட்டியின்போது வைல்கார்டு எண்ட்ரி மூலம் கலந்துகொண்டார். 

ALSO READ | பயங்கர கார் விபத்து; நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம்: தோழி மரணம்

பிரபலமான இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்த இவர் தற்போது பாலிவுட் சினிமாவிலும் நடித்து வருகிறார். அத்துடன் சமீபகாலமாக மல்யுத்தத்திலும் நடிகை அர்ஷகான் கவனம் செலுத்திவருகிறார்.

இந்நிலையில் நேற்று படப்பிடிப்பில் கலந்துகொண்டு டெல்லி அடுத்த மாள்வியா நகர் ஷிவாலிசான் சாலையில் அவர்சென்ற கார் விபத்துக்குள்ளானது அர்ஷிகான் விரைவில் குணமாக வேண்டும் என்று ரசிகர்கள் ஆறுதல் கூறிவருகின்றனர்.

முன்னதாக அக்டோபரில் எனக்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரருடன் நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது. அவர் என் தந்தையால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஆனால் ஆப்கானிஸ்தானை தலிபான் கைப்பற்றிய பிறகு, அந்த உறவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியிருக்கும். அதனால் என் பெற்றோர் எனக்கொரு இந்திய பார்ட்னரை தேடி தருவார்கள் என கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அர்ஷி கான் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூன் மாதம் பிக் பாஸ் தமிழ் சீசன் 2ல் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை யாஷிகா (Yashika Aannand) ஆனந்த் நண்பர்கள் உடன் விருந்துக்கு சென்று விட்டு திரும்பும் போது நள்ளிரவில் ஏற்பட்ட விபத்தில் அவரது தோழி வள்ளி செட்டி பவனி உயிரிழந்தார். மூன்று மாதங்களாக எழுந்து நடக்க முடியாத அளவுக்கு யாஷிகாவுக்கு காலில் பலத்த அடி பட்டது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | மருத்துவமனையில் இருக்கும் யாஷிகாவுக்கு நடிகை வனிதா அறிவுரை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News