தனுஷ்-செல்வராகவன் இணைந்து, யுவன் ஷங்கருடன் மிரட்டும் ‘நானே வருவேன்’

நடிகர் தனுஷ் நடிக்கவுள்ள புதுப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தின் பெயருடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Written by - ZEE Bureau | Last Updated : Jan 14, 2021, 02:34 AM IST
  • தனுஷ் செல்வராகவன் இணைந்து, யுவன் ஷங்கருடன் மிரட்டும் ‘நானே வருவேன்’
  • பொங்கல் பரிசாக படத்தின் பெயர் அறிவிப்பு
  • மூவரின் கூட்டணி மீண்டும் இணைகிறது
தனுஷ்-செல்வராகவன் இணைந்து, யுவன் ஷங்கருடன் மிரட்டும் ‘நானே வருவேன்’

நடிகர் தனுஷ் நடிக்கவுள்ள புதுப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தின் பெயருடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நானே வருவேன் என வித்தியாசமான டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதேபோல் தனுஷும் ‘நானே வருவேன்’ என்று டிவிட்டரில் டைட்டிலை வெளியிட்டு  ரசிகர்களுக்கு பொங்கல் (Pongal) வெகுமதி கொடுத்திருக்கிறார். 

அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன் படத்தில் நடித்து, திரைப்படத் துறையில் காலடி எடுத்துவைத்து, பல திரைப்படங்களில் வெவ்வேறு பரிணாமங்களில் நடித்து பிரபலமானார் தனுஷ்(Dhanush).

செல்வராகவன், தனுஷ், யுவன் ஷங்கர் கூட்டணி ‘புதுப்பேட்டை’ திரைப்படத்தில் இணைந்து வெற்றிக்கொடி நாட்டினர். அதே கூட்டணி நானே வருவேனில் மீண்டும் இணைகிறது.

Also Read | வெளியானது மாஸ்டர் படம்! தியேட்டர்கள் பட்டியல் இங்கே பார்க்கவும்!

தம்பி தனுஷும் அண்ணன் செல்வராகவனும், யுவன் ஷங்கர் ராஜாவுடன் (Yuvan Shankar Raja) மீண்டும் இணைகின்றனர் என்றதும் புதுப்பேட்டை 2 திரைபடத்துக்காக இருக்கும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், புதிதாக வேறு படத்தில் மூவர் கூட்டணி இறங்கியிருப்பதால், இந்த படத்திற்கு பிறகு மீண்டும் இதே கூட்டணி புதுப்பேட்டையின் இரண்டாம் பாகத்தில் இணைந்து பணியும் வாய்ப்பும் உள்ளது. 

தாணு தயாரிப்பில் உருவாகவுள்ள இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக அரவிந்த் கிருஷ்ணா பணிபுரிவார். கலை இயக்குநராக விஜய் முருகன், எடிட்டராக பிரசன்னா ஜி.கே ஆகியோர் பணிபுரிகின்றனர்.தற்போது தனுஷுடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தின் படபிடிப்பு முடிந்தவுடன் நானே வருவேன் படபிடிப்புத் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

Also Read | மருத்துவமனையில் விராட் கோலி பாதுகாப்பை அதிகரிக்கும் காரணம் என்ன?

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!! 

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR   

More Stories

Trending News