'விக்ரம்' படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் இதுதானா?

'விக்ரம்' படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் குறித்து படத்தின் இணை காட்சியமைப்பாளர் ரத்னகுமார் கூறியுள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : May 29, 2022, 04:27 PM IST
  • விக்ரம் படம் ஜூன் 3ம் தேதி வெளியாகிறது.
  • இன்று முதல் முன்பதிவு தொடங்கி உள்ளது.
  • ரசிகர்கள் முதல் காட்சியை பார்க்க மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
'விக்ரம்' படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் இதுதானா? title=

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள விக்ரம் படம் வருகிற ஜூன்-3ம் தேதி திரையரங்குகளில் வெளியகவுள்ளது.  இப்படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.  1986ல் வெளியான 'விக்ரம்' படத்தினை அடிப்படையாக வைத்து தான், தற்போது 'விக்ரம்' படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.  ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த அதிரடியான திரைப்படத்தில் பஹத் பாசில், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், நரேன் மற்றும் காளிதாஸ் ஜெயராம், ஷிவானி ஆகியோர் நடித்துள்ளனர்.  மேலும் இந்த படத்தில் நடிகர் சூர்யா முக்கியமான வேடத்தில் நடித்திருகிறார்.

மேலும் படிக்க | விக்ரம் பட ப்ரோமோஷன் - சூப்பர் ஸ்டாரை சந்தித்த உலக நாயகன்

இந்த திரைப்படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் இப்படத்தின் வசன எழுத்தாளர் ரத்னகுமார் சூர்யாவின் கதாபாத்திரம் குறித்து பேசியுள்ளார்.  அவர் கூறுகையில், நடிகர் சூர்யா விக்ரம் படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பில் கலந்துகொண்டு, அவருக்கான காட்சிகளை நடித்திருந்தார்.  ஆனால் அவர் படப்பிடிப்பில் கலந்துகொண்ட அந்த நாளில் என்னால் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது.  இந்த படத்தில் சூர்யா ஒரு சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.  இவரது காட்சிகள் சில நிமிடங்கள் தான் இருக்கும், ஆனால் அவரது கதாபாத்திரம் அதிக வரவேற்பை பெறும் வகையில் அமையும் என்று கூறியுள்ளார்.  மேலும் நடிகர் சூர்யா இந்த படத்தில் சிறப்பாக நடித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார், இப்படத்தின் வெளியீடு அன்று திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதும், படம் பிரம்மாண்டமாக வெளியாகும் என்று கூறியுள்ளார்.

படத்தை பெரிய திரையில் பார்க்க நானும், படக்குழுவினரும் மிகுந்த ஆர்வத்தில் இருக்கிறோம்.  விக்ரம் திரைப்படம் உலகளவில் ஐந்து வெவ்வேறு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  நடிகர் கமல்ஹாசன் தற்போது பல்வேறு நகரங்களில் படத்தை புரொமோஷன் செய்வதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார், 75வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் 'விக்ரம்' படத்தின் டிரெய்லரையும் அவர் வெளியிட்டார்.

மேலும் படிக்க | ஷங்கர் இயக்கும் ராம் சரண் படத்தின் டைட்டில்! - தலைப்புக்கு இதுதான் ரீஸனா?!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News