இதயம்: பாரதியால் ஊரை விட்டு கிளம்பும் ஆதி.. மரகதத்திற்கு தெரிய வரும் உண்மைகள்

இதயம் சீரியல் அப்டேட்: இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 1, 2024, 01:42 PM IST
  • தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம்.
  • இதயம் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.
இதயம்: பாரதியால் ஊரை விட்டு கிளம்பும் ஆதி.. மரகதத்திற்கு தெரிய வரும் உண்மைகள் title=

இதயம் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைகாட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சாரதா பணத்தை கொடுக்க பாரதி அதை வாங்க மறுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, பாரதி பணத்தை வாங்க மறுக்க சாரதா அவளது குணத்தை பாராட்டுகிறாள். அதோடு தமிழையும் ரொம்ப பிடித்திருப்பதாக சொல்ல இருவரும் அங்கிருந்து கிளம்பி வெளியே வருகின்றனர். 

மேலும் படிக்க | கமல்ஹாசன் கைவிட்ட படங்கள்..இவ்ளோ பெரிய லிஸ்டா..!

இதே நேரத்தில் உள்ளே படுத்து தூங்கி கொண்டிருந்த ஆதிக்கு இதயத்தில் ஏதோ ஒரு உணர்வு ஏற்பட உடனே எழுந்து வெளியே வந்து அம்மாவிடம் வீட்டிற்கு யாராவது வந்தாங்களா? யாரோ என்னை டிஸ்டர்ப் பண்ண மாதிரியே இருந்தது என சொல்ல சாரதா கனவா இருக்கும், யாரும் வீட்டிற்கு வரவில்லை என சொல்லி சமாளிக்கிறாள். 

இதனையடுத்து பாரதி தமிழை கூட்டி செல்ல ஸ்கூலுக்கு வர ஆதியும் அங்கு வர பாரதி முகத்தை திருப்பி கொள்ள ஆதி அவளிடம் பேச முயற்சி செய்தும் பாரதி அவாய்ட் செய்கிறாள். அதே போல் தமிழும் ஆதியிடம் பேசாமல் அவாய்ட் செய்ய வருத்தப்படும் ஆதி ஊரை விட்டே செல்வதாக சொல்லி அங்கிருந்து கிளம்புகிறான். 

அதன் பிறகு நைட் பாரதி வீட்டிற்கு வரும் லதா துரையோட உனக்கு கல்யாணம் நடக்க போகும் விஷயத்தை ஆதியிடம் சொல்ல வேண்டியது தானே, ஆதி இந்த பிரான்ச்சை விட்டே போக போறாரு, அதனால் சென்ட் ஆப் பார்டி வச்சிருக்கோம். நீயும் வா என பாரதியை அழைக்க முதலில் மறுக்கும் பாரதி பிறகு வருவதாக சொல்ல மரகதம் இவர்கள் பேசிய அனைத்தையும் கேட்டு விடுகிறாள். 

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இதயம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைகாட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | தனுஷ் 51 படப்பிடிப்பால் போக்குவரத்து பாதிப்பு..பரபரப்பை ஏற்படுத்திய படக்குழு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ
 

Trending News