அஜித்தைத் தொடர்ந்து சூர்யாவைக் குறிவைக்கும் சிறுத்தை சிவா!

அஜித்தின் படங்களைத் தொடர்ச்சியாக இயக்கிவந்த இயக்குநர் சிறுத்தை சிவா அடுத்ததாக நடிகர் சூர்யாவுக்கு அடுத்தடுத்த படங்களை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 23, 2022, 02:04 PM IST
  • இயக்குநர் சிவா கடந்த 8 ஆண்டுகளில் அஜித், ரஜினியை மட்டுமே இயக்கியுள்ளார்.
  • சூர்யாவின் படத்தை சிவா இயக்கவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
  • இரண்டு பாகங்களாக பீரியட் படமாக உருவாகவுள்ளதாகத் தகவல்.
அஜித்தைத் தொடர்ந்து சூர்யாவைக் குறிவைக்கும் சிறுத்தை சிவா! title=

நடிகர் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்துக்குப் பின்னர்  இயக்குநர் சிறுத்தை சிவா எந்தப் படத்திலும் இன்னும் கமிட் ஆகவில்லை.

கடந்த 8 ஆண்டுகளில் அஜித் மற்றும் ரஜினி என இரண்டு பேர் படங்களை மட்டுமே எடுத்துள்ள அவர், அடுத்ததாக யாருடைய படத்தை இயக்கப்போகிறார் எனும் கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், தனது அடுத்த படத்தில் நடிகர் சூர்யாவை அவர் இயக்கவுள்ளதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. பீரியட் படமாக உருவாகவுள்ள இப்படம் இரண்டு பாகங்களாகத் தயாராகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் அஜித்துக்குத் தனது அடுத்தடுத்த படங்களை இயக்கிய சிவா, தற்போது சூர்யாவுக்கும் தனது அடுத்தடுத்த படங்களை இயக்கவுள்ளார். ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படவுள்ளதாகக் கூறப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூலையில் தொடங்கவுள்ளதாம்.

பூஜா ஹெக்டே அல்லது ரஷ்மிகா மந்தனாவை கதாநாயகியாக நடிக்கவைக்கப் பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றனவாம். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கவுள்ளதாகவும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | ஆரம்பிக்கலாங்களா...‘பிக்பாஸ் 6’ சீசனை நடத்தப்போவது கமலா, சிம்புவா?!

சூர்யாவைப் பொறுத்தவரை வெற்றிமாறனுடன் வாடிவாசல், ஜெய்பீமை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கத்தில் ஒரு படம், சூரரைப்போற்று இயக்குநர் சுதா கொங்கராவுடன் ஒரு படம், பாலா இயக்கத்தில் ஒரு படம் மற்றும் மேலும்  சில படங்களில் கெஸ்ட் ரோல் என பிஸியாக இருந்துவருகிறார். இந்த நிலையில்தான் சிறுத்தை சிவாவுடன் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | விஜய்யின் ‘வெறித்தனம்’ பாடல் புகழ் பாடகி சங்கீதா காலமானார்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News