கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி அன்று ocean gate என்ற நிறுவனத்துக்கு சொந்தமான டைட்டன் நீர் மூழ்கிக் கப்பல் அட்லாண்டிக் கடலுக்கடியில் 12500 அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலை சுற்றிப் பார்க்க கனடாவின் நியூ ஃபவுண்ட்லேண்ட் கடற்கரையில் இருந்து ஒரு பைலட் உள்பட 5 பயணிகளுடன் புறப்பட்டது. பயணத்தை தொடங்கிய 1 மணி 46 வது நிமிடத்தில் அதன் தாய் கப்பலோடு உள்ள தொடர்பு துண்டிக்கப்பட்டது. மேலும் அந்தக் கப்பலில் 96 மணி நேரத்திற்கு தேவையான ஆக்ஸிஜன் மட்டுமே இருந்ததால் கப்பலை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. அப்போதுதான் கப்பல் அழுத்தம் தாங்க முடியாமல் வெடித்ததாக அமெரிக்க கடலோர காவல் படை கண்டுபிடித்தது. பின்னர் வெடித்து சிதறிய பாகங்கள் ஒவ்வொன்றாக கண்டெடுக்கப்பட்டன.
இந்நிலையில் இந்த விபத்துக்கு பாதுகாப்பு குறைபாடுகள் மட்டுமே காரணம் என்று சொல்லப்பட்டது குறிப்பாக ஓசன் கேட் நிறுவனரும் டைட்டனில் பயணித்து பலியானவருமான stocton rush இந்தப் பாதுகாப்பு குறைபாடுகள் பற்றி முன்னரே தெரிவிக்கவில்லை என்ற பேச்சுகளும் எழுந்தன. இது ஒரு புறம் இருந்தாலும் டைட்டன் நீர்மூழ்கி வெடித்து சிதறியதன் பின்னணி என்ன என்பது பற்றிய ஆய்வுகளும் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் Jose Louis Martin என்ற ஸ்பெயின் ஆழ் கடல் ஆராய்ச்சியாளர் டைட்டனில் பயணித்தவர்களுக்கு தாங்கள் இறக்கப் போகிறோம் என்பது என்பது 46 வினாடிகளுக்கு முன்பு மட்டுமே அதில் பயணித்தவர்களுக்கு தெரிய வந்திருக்கும் என்ற ஒரு பரபரப்பு விஷயத்தை தெரிவித்து இருந்தார்.
மேலும் படிக்க | கோடிகளில் புரளும் சிவகார்த்திகேயன்...’மாவீரன்’ படக்குழுவின் சம்பள விவரம்..!
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நேர்காணல் ஒன்றில் டைட்டன் பற்றி பேசி இருந்த இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் டைட்டன் நீர்மூழ்கிக்கும் டைட்டானிக் கப்பலுக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. டைட்டானிக் கப்பலை பொறுத்தவரை கேப்டன்கள் இருவருக்கும் பனிப்பாறையில் மோதுவதற்கு முன்னரே மீண்டும் மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது ஆனால் அதை அவர்கள் புறக்கணித்தனர். அதேபோல தான் டைட்டனும் பலரும் எச்சரிக்கை விடுத்தும் அதை கண்டு கொள்ளாதது தான். இந்த 2 விபத்துக்கு காரணம் என்ற வகையில் பேசி இருந்தார்.
I don’t respond to offensive rumors in the media usually, but I need to now. I’m NOT in talks about an OceanGate film, nor will I ever be.
— James Cameron (@JimCameron) July 15, 2023
டைட்டன் பற்றி ஜேம்ஸ் கேமரூன் பேசியதும் 1997 இல் அவர் எடுத்த டைட்டானிக் படத்தைப் போலவே டைட்டன் பற்றியும் அவர் ஒரு படத்தை எடுக்க உள்ளார் என சோசியல் மீடியாக்களில் வதந்திகள் அதிகமாக பரவின. ஜேம்ஸ் கேமரூன் அந்த படத்திற்கு Ocean gate Titan என்ற பெயரை வைக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவியது.
இந்த வதந்திகளுக்கு இப்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கும் ஜேம்ஸ் கேமரூன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பொதுவாக நான் மீடியாவில் பரவும் வதந்திகளுக்கு பதில் அளிப்பதில்லை ஆனால் இப்போது பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். நான் ocean gate படம் பற்றி பேசவில்லை அந்த படத்தை நான் எடுக்கப் போவதும் இல்லை என்று தெரிவித்துள்ளார். டைட்டன் நீர்மூழ்கி விபத்துக்குள்ளானதில் இருந்து டைட்டானிக் இன் 2வது பாகத்தை டைட்டன் என்ற பெயரில் ஜேம்ஸ் கேமரூன் படமாக எடுக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் படித்த மாணவர் செய்த சாதனை..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ