கலையிழந்த துறைக்காக ஒன்று கூடும் இசைக் கலைஞர்கள்: FB-ல் பல குரல்கள்..ஒரு குரலாய்…

மிகவும் கடுமையான, சவால் மிகுந்த காலங்களை எதிர்கொண்டிருக்கும் தமிழ் திரையுலக இசைத் துறை பணியாளர்களுக்காக, நிதி திரட்டும் நோக்கோடு இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 10, 2020, 08:39 PM IST
  • தமிழ் திரையுலகிலிருந்து, 80 க்கும் மேற்பட்ட பின்னணி பாடகர்கள் ஒரு இ-கச்சேரியை நடத்த உள்ளனர்.
  • ‘ஓரு குரலாய்’ என்ற தலைப்பில் 6 மணி நேர இசை நிகழ்ச்சி செப்டம்பர் 12 அன்று நடக்கவுள்ளது.
  • கமலஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரும் இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவித்தவர்களில் அடங்குவர்.
கலையிழந்த துறைக்காக ஒன்று கூடும் இசைக் கலைஞர்கள்: FB-ல் பல குரல்கள்..ஒரு குரலாய்… title=

புதுடில்லி: தமிழ் திரையுலகிலிருந்து (Kollywood), 80 க்கும் மேற்பட்ட பின்னணி பாடகர்கள் ஒரு இ-கச்சேரியை (E-Concert) நடத்த உள்ளனர். மிகவும் கடுமையான, சவால் மிகுந்த காலங்களை எதிர்கொண்டிருக்கும் தமிழ் திரையுலக இசைத் துறை பணியாளர்களுக்காக, நிதி திரட்டும் நோக்கோடு இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேரடி நிகழ்ச்சிகள் மற்றும் பிற நிகழ்வுகள் நிறுத்தப்பட்ட நிலையில், இசைக்கலைஞர்கள், பாடகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் வாழ்வாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

‘ஓரு குரலாய்’ (Oru Kuralai) என்ற தலைப்பில் 6 மணி நேர இசை நிகழ்ச்சி செப்டம்பர் 12 சனிக்கிழமையன்று பேஸ்புக்கில் (facebook) ஒளிபரப்பப்பட உள்ளது. பாடகர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் பிற பிரபலங்களும் இதில் கலந்துகொள்வார்கள். இந்த முயற்சியை யுனைடெட் சிங்கர்ஸ் நற்பணி மன்றம் (USCT) ஏற்பாடு செய்துள்ளது. இது பின்னணி பாடகர்களான சீனிவாஸ், உன்னிகிருஷ்ணன், சுஜாதா மோகன் ஆகியோரால் நிறுவப்பட்டது.

ALSO READ: உடல்நலக்குறைவு காரணமாக காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்

நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் இந்த நிகழ்ச்சிக்கான போஸ்டரை வெளியிட்டு, இதற்கான ஆதரவை தெரிவித்தனர். மூத்த இசையமைப்பாளர் இளையராஜா (Illayaraja) இது தங்கள் சக பணியாளர்களுக்கு உதவுவதற்கான திரைத் துறையின் ஒரு முயற்சியாகும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சிக்கு தங்கள் ஆதரவை அளிக்குமாறு அவர் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

கமலஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான் (AR Rehman) ஆகியோரும் இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவித்தவர்களில் அடங்குவர்.

மெய்நிகர் நிகழ்வில் (Virtual Event) பென்னி தயால், சித் ஸ்ரீராம், விஜய் யேசுதாஸ், ஹரிச்சரன், ஸ்வேதா மோகன், உன்னி மேனன், சுஜாதா மோகன், கார்த்திக், ஆண்ட்ரியா போன்றோரின் நிகழ்ச்சிகள் இடம்பெறும்.

ALSO READ: நடிகை கங்கனா ரனாவத்தின் சொத்து மதிப்பு மற்றும் ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா?

Trending News