விஜய்யின் கோட் படத்தின் முழு பட்ஜெட், சம்பளம் முழு விவரம் இதோ

நடிகர் விஜய் தி கோட் திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் விஜய்யின் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 2, 2024, 03:23 PM IST
  • விஜய்யின் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
  • நடிகர் விஜய்யின் சம்பளம் கோட் படத்திற்கு ரூ. 200 கோடி என கூறப்படுகிறது.
  • கோட் படத்தின் பட்ஜெட் ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ. 400 கோடி.
விஜய்யின் கோட் படத்தின் முழு பட்ஜெட், சம்பளம் முழு விவரம் இதோ title=

Actor Vijay Salary And Total Budget Of Goat Movie: தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படமாக இருக்கிறது, தி கோட். இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். தற்போது இந்த படத்தின் பட்ஜெட் மற்றும் விஜய்யின் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

தி கோட் திரைப்படம்:
தமிழ் திரையுலகின் ஜாலியான இயக்குநராக அறிப்படுபவர், வெங்கட் பிரபு. இவருடன் நடிகர் விஜய், முதன் முறையாக ‘தி கோட்’ (The Greatest Of All Time) படத்தில் கைக்கோர்த்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில், சமீபத்தில் அனைத்து கிராஃபிக்ஸ் மற்றும் டெக்னாலஜி பணிகளும் நடைப்பெற்று முடிந்தது.

தி கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய் தந்தை-மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். இவருடன் சேர்ந்து, சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி, பிரபு தேவா, பிரசாந்த், அஜ்மல், ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். 80களில் பிரபல நாயகனாக இருந்த மைக் மோகன், தி கோட் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இவரை இதுவரை நெகடிவ் ஷேட் கதாப்பாத்திரங்களில் பார்த்திராத ரசிகர்களுக்கு, தி கோட் படத்தில் இவரது கேரக்டர் புதுமையான முகத்தை காண்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | Latest News Actor Jiiva Angry : பாலியல் புகார்கள் குறித்த கேள்வி..டென்ஷனான நடிகர் ஜீவா!! என்ன பிரச்சனை?

எப்போது ரிலீஸ்?
புதிதாக “தமிழக வெற்றிக்கழகம்” என்ற அரசியல் கட்சியை தொடங்கியிருக்கும் விஜய், அடுத்து தனது 69வது படத்தில் நடித்து முடித்தவுடன் முழு நேரமாக அரசியலில் இறங்க இருக்கிறார். இந்த நிலையில், ஜாலியாக ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்த இவர், தி கோட் படத்தின் கதையை ஓகே செய்தார். இப்படம், விநாயகர் சதுர்த்தியை அடுத்த வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருப்பதால் படத்தின் மீதும் எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.

தி கோட் ப்ரீ புக்கிங்:
இந்நிலையில் தற்போது மக்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் கோட் படத்தின் ப்ரீ புக்கிங் தற்போது உலகம் முழுவதும் துவங்கியுள்ளது. அதன்படி தற்போது வரை GOAT திரைப்படம் உலகளவில் செய்துள்ள ப்ரீ புக்கிங்கில் செய்துள்ள வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, GOAT திரைப்படம் உலகளவில் ப்ரீ புக்கிங்கில் இதுவரை ரூ. 15 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என கூறப்படுகிறது. 

தி கோட் பட்ஜெட் மற்றும் நடிகர் விஜய்யின் சம்பளம்:
இந்நிலையில் விஜய்யின் கோட் படத்தின் பட்ஜெட் மற்றும் விஜய்யின் சம்பளம் குறித்து தயாரிப்பாளர் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர், கோட் படத்தின் பட்ஜெட் ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ. 400 கோடி வந்துவிட்டதாக அர்ச்சனா கல்பாத்தி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

பிகில் படத்திற்கு பிறகு தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, வட இந்தியா, ஓவர்சீஸ் என அனைத்து இடங்களிலும் விஜய்யின் மார்க்கெட் தாறுமாறாக அதிகமாகவே அவரின் சம்பளமும் உயர்ந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். நடிகர் விஜய்யின் சம்பளம் கோட் படத்திற்கு ரூ. 200 கோடி என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | MS Dhoni Cameo In The GOAT Movie  : GOAT படத்தில் தோனி கேமியோ உறுதி?! ‘இந்த’ காட்சியில் வருவாராம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News