)
Latest News Coolie Movie : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்த், தற்போது கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி..
கோலிவுட் திரையுலகில், வெகு சில படங்களே இயக்கி இருந்தாலும் மடமடவென முன்னணி இயக்குநராக வளர்ந்து நிற்பவர், லோகேஷ் கனகராஜ். மாநகரம் படம் மூலம் அறிமுகமான இவர், கைதி படத்தை இயக்கி வெற்றி பெற்றார். இதையடுத்து விஜய்யை வைத்து மாஸ்டர் மற்றும் லியோ படங்களை இயக்கினார். கமலை வைத்து இயக்கிய விக்ரம் திரைப்படமும் பெரிய ஹிட் அடித்தது. போதாக்குறைக்கு இவர் உருவாக்கிய ‘லோகேஷ் கனகராஜ் சினிமாடிக் யுனிவர்ஸ்’ கான்செப்டும் ஹிட் அடித்தது. தொடர்ச்சியாக படங்கள் வெற்றி பெற்றதை அடுத்து, நடிகர் ரஜினியுடன் கைக்கோர்க்கும் வாய்ப்பையும் பெற்றார் லோகேஷ் கனகராஜ். தற்போது, ரஜினியின்171வது படமான கூலி படத்தை இயக்குகிறார்.
கூலி திரைப்படம்:
கூலி திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார். அன்பரிவ், சண்டை கலைஞர்களாக இருக்கின்றனர். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான போதே இதன் மீது எதிர்பார்ப்பும் பெருகியது.
கூலி படத்தின் டைட்டில் ரிவீலிங் வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதில் நடிகர் ரஜினி பல வருடங்களுக்கு முன்னர் தனது படத்தில் பேசிய “அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்..” என்ற டைலாக்கை பேசியிருக்கிறார். இதுவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.
புது நடிகர்..
கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடிப்பவர்கள் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அந்த வகையில், தற்போது ஒரு புதிய நடிகர் இதில் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது. அவர், கன்னட மொழி சூப்பர் ஸ்டார் நடிகராவார். அவர் யார் தெரியுமா?
கன்னட திரையுலகை சேர்ந்த 55 வயது பிரபல நடிகர் உப்பேந்த்ரா. நடிகராக மட்டுமன்றி, திரைக்கதை எழுத்தாளராகவும், பின்னணி பாடகராகவும் இருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ஹிட் ஆகியிருக்கின்றன. தமிழில், விஷால் நடிப்பில் வெளியான சத்யம் படத்தில் நெகடிவ் ஷேட் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர், தற்போது ரஜினியுடன் கூலி படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினியின் மகள் யார் தெரியுமா?
கூலி திரைப்படத்தில் ரஜினிக்கு மகளின் கதாப்பாத்திரமும் வருகிறது. அதில் நடிப்பது யார் தெரியுமா? நடிகையும், கமல்ஹாசனின் மகளுமான ஸ்ருதிஹாசன்தான் என கூறப்படுகிறது. ரியல் வாழ்க்கையில் தந்தை-மகளான கமல்-ஸ்ருதி ஹாசன் ஹேராம் படத்தை தவிர ஒன்றாக எந்த படத்திலும் நடித்ததில்லை. அப்படியிருக்கையில், சக போட்டி நடிகரான ரஜினிக்கு மகளாக ஸ்ருதி நடிப்பது குறித்து வைரலாக பேசப்பட்டு வருகிறது.
கதை என்ன?
கூலி திரைப்படத்தின் கதை குறித்த தகவல் சமீபத்தில் வெளியானது. இது, கேங்க்ஸ்டர் கதையாக இருக்கும் என கூறப்படுகிறது. இளம் பருவத்தில் தனக்கு நேர்ந்த அநீதிக்காக வளர்ந்து வந்து ஒருவன் பழி வாங்கும் கதைதான் கூலி என கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ