‘இந்த’ படத்தின் காபிதான் லியோ படமா? அச்சு அசலாக அப்படியே இருக்கும் காட்சிகள்!

Leo Movie Inspiration: லியோ திரைப்படம் வரும் 19ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படம் ஒரு ஹாலிவுட் படத்தின் நகல் என்று கூறப்படுகிறது. அது எந்த படம் தெரியுமா? 

Written by - Yuvashree | Last Updated : Oct 7, 2023, 11:12 AM IST
  • லியோ படம் வரும் 19ஆம் தேதி வெளியாகிறது.
  • இது, ஹாலிவுட் படம் ஒன்றின் காபி என்று கூறப்படுகிறது.
  • அது என்ன படம் தெரியுமா?
‘இந்த’ படத்தின் காபிதான் லியோ படமா? அச்சு அசலாக அப்படியே இருக்கும் காட்சிகள்! title=

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம், லியோ. இப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த நிலையில், இப்படம் ஒரு ஹாலிவுட் படத்தின் நகல் என கூறப்படுகிறது. 

லியோ:

விஜய்-லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக ஒன்று சேர்ந்து பணியாற்றி இருக்கும் படம், லியோ. இதன் படப்பிடிப்பு காஷ்மீர், சென்னை ஆகிய இடங்களில் நடைப்பெற்றது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதில் இருந்து ரசிர்கள் படு குஷியில் இருந்தனர். படத்தின் டிரைலரில் இருந்து படத்தில் அதிரடியான ரத்தம் தெறிக்கும் சண்டை காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன என்பதை ரசிகர்கள் கணித்துள்ளனர். மேலும், இதில் விஜய் இரு வேடங்களில் நடித்திருப்பார் என்றும் கூறப்படுகிறது. 

‘இந்த’ படத்தின் காபியா?

லியோ படத்தின் கதை, ஒரு ஹாலிவுட் படத்தின் நகல் என்று கூறப்படுகிறது. ஹாலிவுட்டில் மாஸ் ஹிட் அடித்த படம், ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் (History Of Violence). லோகேஷ் கனகராஜ் ஹாலிவுட் படங்களை அதிகம் பார்ப்பார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் இயக்கும் படங்களில் உள்ள ஒரு காட்சிகள் சில ஹாலிவுட் படங்களை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொண்டு சில காட்சிகளை அந்த படத்தில் உள்ளது போல வைத்திருப்பார் என்று கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | விஜய்க்கு எதிராக கிளம்பிய மோகன் லால் ரசிகர்கள்..! ட்விட்டரில் ட்ரெண்டாகும் #BoycottLeo!

Leo

கதை இதுதானா..? 

2006ஆம் ஆண்டு வெளியான படம், ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ். ஒரு நகரில் உணவுக்கடை வைத்து நடத்தி வரும் ஹீரோ, தன் ஊருக்குள் வரும் திருடர்களை கொல்கிறான். இதனால் அவனை அந்த நகரில் இருப்பவர்கள் அவரை கொண்டாடுகிறார்கள். அவன் செய்த கொலையால் பல கேங்ஸ்டர்கள் அவனை தேடி வருகின்றனர். இதனால் அவனது குடும்பத்துடனான உறவு ஹீரோவிற்கு முறிந்து போகிறது. அடுத்து அவன் வாழ்வில் என்ன நிகழ்கிறது என்பதுதான் கதை. இதே போன்ற கதைதான் லியோ படத்திலும் இடம் பெற்றுள்ளதாக ரசிகர்கள் இரு படத்தின் டிரைலர்களையும் ஒப்பிட்டு வருகின்றனர். 

ரசிகர்கள் உற்சாகம்…

லியோ படத்தின் ரிலீஸிற்காக ரசிகர்கள் அனைவரும் ஆர்வமுடன் காத்துக்கொண்டுள்ளனர். படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த 30ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், இந்த விழாவிற்கு அதிக டிக்கெட்டுகள் கேட்க ஆரம்பித்ததால் அந்த விழா நடத்த முடியாமல் போனது. இதையடுத்து, படத்தின் லியோ Badass பாடல் வெளியானது. இந்த பாடலுக்கும் ரசிகர்கள் நன்றாகவே வரவவேற்பு அளித்துள்ளனர். 

படக்குழு:

லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். மாத்யூ தாமஸ் இதில் விஜய்க்கு மகன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த், மிஷ்கின், மன்சூர் அலிகான்,  உள்ளிட்ட பலர் இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப், நடிகர் அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், படம் வெளியான பிறகுதான் இவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்களா இல்லையா என்பது தெரியும். 

மேலும் படிக்க | நடிகர் விஜய் மீது போலீஸில் பரபரப்பு புகார்..! சிக்கலில் லியோ திரைப்படம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News