‘பரியேறும் பெருமாள்’ படத்தை பாராட்டிய உலக நாயகன் கமல்ஹாசன்

‘பரியேறும் பெருமாள்’ படக்குழுவை பாராட்டிய மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.

Written by - ZEE Bureau | Last Updated : Oct 3, 2018, 07:39 PM IST
‘பரியேறும் பெருமாள்’ படத்தை பாராட்டிய உலக நாயகன் கமல்ஹாசன்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், ஆனந்தி, யோகிபாபு உட்பட பலர் நடித்திருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. இந்த படத்தை இயக்குனர் பா. ரஞ்சித் தயாரித்துள்ளார். இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது. சமூக ஊடகங்களில் இந்த படத்தை குறித்து பாராட்டு வருகின்றனர். ‘பரியேறும் பெருமாள்’ படம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளதால், தற்போது அதிக திரையரங்குகளில் வெளியிடப்பட்டு உள்ளது.

அது மட்டுமில்லாமல், ‘பரியேறும் பெருமாள்’ படத்தை குறித்து பல அரசியல் தலைவர்கள் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும் ஆனா கமல்ஹாசன், இந்த படத்தை பாராட்டி உள்ளார். அதுக்குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் ‘பரியேறும் பெருமாள்’ இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரை நேரில் அழைத்து வாழ்த்துக்கள் கூறி உள்ளார்.

 

கமல்ஹாசன் கருத்துக்கு தயாரிப்பாளர் பா.ரஞ்சித் நன்றி மற்றும் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

 

 

More Stories

Trending News