மாமன்னன் படத்தின் ‘ஜிகுஜிகு ரயில்’ பாடலில் க்யூட்டாக நடனமாடும் ஏ.ஆர்.ரஹ்மான்..!

Maamannan Second Single: உதயநிதி ஸ்டலலின் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் மாமன்னன் படத்திலிருந்து ‘ஜிகு ஜிகு ரயில்’ என்ற புதிய பாடல் வெளியாகியுள்ளது.

Written by - Yuvashree | Last Updated : May 27, 2023, 01:13 PM IST
  • மாமன்னன் படம் பக்ரீத் திருநாளையொட்டி வெளியாகும் என கூறப்படுகிறது.
  • ஏ.ஆர் ரஹ்மான் இந்த படத்தில் இசையமைத்துள்ளார்.
  • படத்தின் செகண்ட் சிங்கிளான ஜிகு ஜிகு ரயில் பாடல் வெளியாகியுள்ளது.
மாமன்னன் படத்தின் ‘ஜிகுஜிகு ரயில்’ பாடலில் க்யூட்டாக நடனமாடும் ஏ.ஆர்.ரஹ்மான்..! title=

மாரி செல்வராஜ் இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் திரைப்படம், மாமன்னன். நகைச்சுவை நடிகர் வடிவேலு இதில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதன் முதல் சிங்கிள் பாடலான ‘ராசா கண்ணு’ வெளியானதை அடுத்து அதன் இரண்டாவது சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது. 

‘ஜிகு ஜிகு ரயில்..’

ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல், குழந்தைகளுக்கு பிடித்தார் போல மெட்டு போட்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் பாடலின் வரிகள் ஒரு சாமானியனின் வாழ்க்கையுடன் பொருந்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது. 5 நிமிடங்கள் 21 நொடிகளுடன் உள்ள இந்த பாடல் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் வீடியோக்களுள் ஒன்றாக உள்ளது. மாரி செல்வராஜ்ஜின் ட்ரேட் மார்க் ‘டச்’சான கருப்பு வெள்ளை வண்ணத்திலேயே இந்த பாடலும் இடம் பெற்றுள்ளது. யுகபாரதி எழுதியுள்ள இப்பாடலின் வரிகளில் நிறைய அர்த்தம் உள்ளதாக ரசிகர்கள் கமெண்டுகளில் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | Priya Atlee: கேன்ஸ் திரைப்பட விழாவில் ட்வின்னிங் செய்த பிரியா-அட்லீ..!

க்யூட் நடனமாடும் ஏ.ஆர்.ரஹ்மான்:

‘இசைப்புயல்’ என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் இதுவரை தான் இசையமைத்த படங்களின் பாடல்கள் எதிலும் வராமல் இருந்தார். பிகில் படத்தின் ‘சிங்கப்பெண்ணே..’ பாடலில் அட்லீ-விஜய்யுடன் முதல்முறையாக தோன்றினார். அதன் பிறகு, இப்போது மாமன்னன் பாடலின் லிரிக்கல் வீடியோவில் குழந்தைகளுடன் சேர்ந்து அவ்வப்போது சிறுசிறு க்யூட்டான நடன அசைவுகளால் ரசிகர்களை கவர்ந்துள்ளார், ஏ.ஆர்.ஆர். 

ராசா கண்ணு பாடல்:

ஜிகு ஜிகு ரயில் பாடலுக்கு முன்னதாக வெளியான ராசா கண்ணு பாடலை நடிகர் வடிவேலு பாடியிருந்தார். அந்த பாடலும் கருப்பு வெள்ளை நிறத்தில் மாரி செல்வராஜ் படங்களை பறைசாற்றும் அத்தனை அம்சங்களையும் அடக்கி இருந்தது. இந்த பாடல், வெளியான சில நிமிடங்களிலேயே பல ஆயிரம் லைக்ஸ்களை கடந்து வைரலானது. ரசிகர்களும் ராசா கண்ணு பாடலுக்கு நல்ல வரவேற்ப்பினை கொடுத்தனர். இதையடுத்து, இந்த பாடல் கர்ணன் படத்தில் இடம் பெற்ற ‘கண்டா வர சொல்லுங்க..’ பாடல் போல இருப்பதாக சில ரசிகர்கள் கருத்து கூறினர். இதையொட்டி இன்று வெளியாகியுள்ள ஜிகு ஜிகு ரயில் பாடலும் ‘ஏலே கீச்சான் வந்தாச்சு’ பாடல் போல உள்ளதாக சில ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ராசா கண்ணு பாடலில் காட்டியிருந்த பொம்மை, காட்சி  அமைக்கப்பட்டிருக்கும் விதம் உள்பட அனைத்துமேகர்ணன் படத்தினைதான் ரசிகர்களுக்கு நினைவூட்டுவதாக சிலர் தெரிவிக்கின்றனர். 

ரிலீஸ் எப்போது?

கோலிவுட் சினிமா ரசிகர்களால் அதிகமாக எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்றாக உள்ளது மாமன்னன் திரைப்படம். இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளையும் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவையும் மிகவும் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டு உள்ளதாக திரையுலக வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 11ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. படம், இந்த வருடத்தில் வரும் பக்ரீத் பன்டிகையை ஒட்டி  (ஜூன் 29) வெளியாக உள்ளதாக கடந்த சில நாட்களாகவே தகவல்கள் பரவி வருகின்றன. பிற மாரி செல்வராஜ்ஜின் படங்கள் போலவே இந்த படமும் சமூகத்திற்கு தேவையான கருத்துகளை கூறும் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | ‘ராகவன் மீண்டும் வறார்’ ரீ-ரிலிஸ் ஆகிறது கமலின் வேட்டையாடு விளையாடு படம்-எப்போது தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEata

Trending News