Master: தளபதி விஜய்யின் "மாஸ்டர்" திரைப்படம் வெளியீடு தேதி குறித்து படக்குழு விளக்கம்

நவம்பர் 14 ஆம் தேதி வரும் தீபாவளி நாளில் விஜய் (Actor Vijay) நடித்த "மாஸ்டர்" திரைக்கு வரும் என்று செய்திகள் பரவத் தொடங்கியது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் ஏற்பட்டது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 2, 2020, 02:19 PM IST
  • தளபதி விஜய்யின் "மாஸ்டர்" படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.
  • நவம்பர் 10 ஆம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர் திறக்கலாம்: தமிழக அரசு
  • மாஸ்டர்" படம் பொங்கல் 2021 அன்று வெளியிடப்படலாம் எனத் தகவல்.
Master: தளபதி விஜய்யின் "மாஸ்டர்" திரைப்படம் வெளியீடு தேதி குறித்து படக்குழு விளக்கம் title=

Master Movie Updates: லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கிய தளபதி விஜய்யின் "மாஸ்டர்" (Master Movie) எப்பொழுது வெளிவரும் என இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் "மாஸ்டர்" ஒன்றாகும். நாட்டில் கொரோனா அச்சுறுத்தலை அடுத்து, மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளன. தற்போது ஊரடங்கு விதிகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வருவதால், சுமார் கடந்த மாதங்கள் மூடப்பட்டு இருந்த சினிமா தியேட்டர் நவம்பர் 10 ஆம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் திறக்கலாம் எனத் தமிழக அரசு அனுமதித்துள்ளது. இதனையடுத்து 

நவம்பர் 14 ஆம் தேதி வரும் தீபாவளி நாளில் விஜய் (Actor Vijay) நடித்த "மாஸ்டர்" திரைக்கு வரும் என்று செய்திகள் பரவத் தொடங்கியது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் ஏற்பட்டது. 

ஆனால் தற்போதைய சூழலில் படம் வெளியிடப்படாது என்று "மாஸ்டர்" படக்குகுழு தெளிவுபடுத்தியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையில் திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை பொறுத்தே, படம் எப்பொழுது வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. பல தயாரிப்பாளர்கள் படம் வெளியிடுவதில் சற்று தயங்குவதாகக் கூறப்படுகிறது. 

ALSO READ |  விரைவில் வெளியாகிறது தளபதி விஜய்யின் மாஸ்டர் டீஸர்

எனவே "மாஸ்டர்" படம் பொங்கல் 2021 க்கு (Master will be Release Pongal 2021) வெளியிடப்படலாம் என்று சில சினிமா ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். 

எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரித்த "மாஸ்டர்" படத்தில் விஜய், விஜய் சேதுபதி (Vijay Sethupathi), சாந்தனு பாக்யராஜ், நாசர், மாளவிகா மோகனன் (Malavika Mohanan), ஆண்ட்ரியா ஜெரெமையா (Andrea Jeremiah ) ஆகியோர் நடித்துள்ளனர்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News