சந்தானத்தின் டிக்கிலோனா – பட விமர்சனம்..!!

கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ள படமான டிக்கிலோனா, விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு OTT தளத்தில் வெளியாகியுள்ளது.

Written by - Anandakumar | Last Updated : Sep 10, 2021, 03:16 PM IST
சந்தானத்தின் டிக்கிலோனா – பட விமர்சனம்..!!

கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ள படமான டிக்கிலோனா, விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு OTT தளத்தில் வெளியாகியுள்ளது. அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய டயம் ட்ராவல் காமெடி படம் எப்படி இருக்கிறது என பார்ப்போம்.

டைம் டிராவல் கதைகள் தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. சமீபத்தில் இன்று நேற்று நாளை வெளியாகி மெஹா ஹிட் அடித்தது. அது மாதிரியான ஒரு கதையில் காமெடி கலந்து கொடுத்திருக்கிறது டிக்கிலோனா. அந்த வகையில் இது ஒரு காமெடி டைம் டிராவல் திரைப்படம்.

சந்தானம் உடல் எடையை குறைத்து புது எண்ட்ரி கொடுத்திருக்கிறார். ஆனால் அளவுக்கு அதிகமாக எடையைக் குறைத்தால் முகம் எல்லாம் வாடிப் போனது போல இருக்கிறது. விரைவில் மீண்டுவிடுவார். மூன்று கெட்டப்கள். மூன்றிலும் வித்தியாசம் காட்சி அசத்தியிருக்கும் சந்தானத்துக்கு சபாஷ் போடலாம்.

ALSO READ | Kollywood: எம்ஜிஆராக நடிக்கும் நடிகர் அரவிந்த்சாமியின் பிறந்தநாள் கலக்கல் போஸ்டர்

முதல் காட்சியிலேயே ஹீரோயின் அனகாவை காதல் திருமணம் செய்து கொள்கிறார் சந்தானம். ஏழு ஆண்டுகளுக்கு பின் கணவன் மனைவி உறவில் தகராறு இருப்பதால் டைம் டிராவலில் போய் திருமணத்தை நிறுத்தப் பார்க்கிறார். அதே வாழ்க்கை திருமணம் நடக்காமல் வேறு பக்கமாக பயணிக்கிறது அந்த உறவும் சரியாக அமையாமல் போக அந்த சந்தானமும் மீண்டும் டைம் டிராவலில் ஏறி திருமணம் நடக்கும் நாளுக்கு வந்து விடுகிறார். பின்னர் மூவரும் சேர்ந்து எந்த வாழ்க்கையை தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதுதான் கதை.

ALSO READ | தலைவி எப்படி இருக்கிறது; வெளியானது விமர்சனம்!

அக்கரைக்கு இக்கரை பச்சை என்னும் கதைதான் டிக்கிலோனா. எந்த வாழ்க்கையை தேர்ந்தெடுத்தாலும் அதில் இன்பதுன்பம் இருக்கத்தான் செய்யும். அதிலிருந்து தப்பிக்கவே முடியாது என்பதைதான் காமெடியுடன் சேர்த்து வித்தியாசமான சயின்ஸ் ஃபிக்ஷன் அமைப்பில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் யோகி.

முதல் பாதியில் நிழல்கள் ரவியின் கதை, இரண்டு சந்தானத்துக்குள்ளான சண்டை, பேர் வெச்சாலும் வெக்காம போனாலும் ரீமிக்ஸ் பாடல் என அதகளமாக நகர்கிறது. இரண்டாம் பாதி இரண்டாவது வாழ்க்கையிலும் கஷ்டங்கள், திருமண அரங்கில் ஆனந்த் ராஜ், முனீஸ்காந்தின் வறட்சியான காமெடி என சலிப்பு தட்டுகிறது. ஒட்டுமொத்தமாக ஒரு நல்ல ஜாலியான எண்டர்டெயினர் திரைப்படத்தை சந்தானம் கொடுத்திருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை.

ALSO READ : இயக்குநர் ஹரி - அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் "யானை" திரைப்பட First Look வெளியீடு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

More Stories

Trending News