Nayanthara's Netrikann: OTT இல் வெளியாகும் நெற்றிக்கண் திரைப்படம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து முடித்துள்ள நெற்றிக்கண் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 21, 2021, 02:04 PM IST
Nayanthara's Netrikann: OTT இல் வெளியாகும் நெற்றிக்கண் திரைப்படம் title=

Netrikann Update: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அனைத்து படங்களுக்கும் அவருடைய ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருப்பது இயல்பான விஷயம். அதிலும், நெற்றிக்கண் திரைப்படம் சமீப காலங்களில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள படமாகும்.

மிலிந்த் ராவ் இயக்கியுள்ள நெற்றிக்கண் படம், 2011 ஆண்டு வெளிவந்த கொரிய மொழி படமான ப்ளைண்ட் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். கண் பார்வை இல்லாத ஒரு பெண், தன்னுடைய மற்ற திறன்களைப் பயன்படுத்தி ஒரு சீரியல் கொலையாளியைக் கண்டுபிடிப்பதுதான் இப்படத்தின் கதைக்களம் ஆகும். நெற்றிக்கண் படத்தில் (Netrikann) அஜ்மல் அமீர், சரண், இந்துஜா மற்றும் மணிகண்டன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் மற்றும் கிராஸ் பிக்சர்ஸ் இப்படத்தை இணைந்து தயாரிக்கின்றன.

ALSO READ | நயன்தாராவின் நெற்றிக்கண்: விக்னேஷ் சிவன் அளித்த லேட்டஸ்ட் அப்டேட் இதொ!!

அவள் புகழ் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவை ஆர்.டி.ராஜசேகர் கையாள்கிறார். இந்த படத்தின் டீஸர் நயன்தாராவின் (Nayanthara) பிறந்தநாளை முன்னிட்டு வெளியான நிலையில், தற்போது, ரிலீஸ் குறித்த தகவல் அதிகார பூர்வமாக வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் ரவுடி பிச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பும், நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண் திரைப்படம், ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நெற்றிக்கண்  திரைப்படத்தை ஓ.டி.டி உரிமையை ஹாட்ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளது. மேலும் இதற்கான அறிவிப்பையும் அந்த நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் விரைவில் நெற்றிக்கண் திரைப்படம் வெளியாக உள்ளது.

 

 

ALSO READ: நெற்றிக்கண் : அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News