இந்தியாவின் முதல் ஆஸ்ட்ரோ-திரில்லர் படமாக வெளிவரும் ராதே சியாம்!

பிரபாஸ் நடித்துள்ள ராதே சியாம் திரைப்படம் மார்ச் 11-ம் தேதி திரையரங்கில் வெளியாகிறது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 2, 2022, 04:48 PM IST
  • மிகப்பெரிய பொருட்செலவில் ராதே சியாம் படம் உருவாக்கி உள்ளது.
  • பிரபாஸ் மற்றும் பூஜா ஹெட்டே இப்படத்தில் நடித்து உள்ளனர்.
இந்தியாவின் முதல் ஆஸ்ட்ரோ-திரில்லர் படமாக வெளிவரும் ராதே சியாம்! title=

எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிற வைத்துள்ள பிரமாண்டமான படமான ராதே ஷ்யாம் படத்தை யூவி கிரியேஷன்ஸ் பேனரில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில், ராதா கிருஷ்ண குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.  வரும் மார்ச் 11ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக தயாராக உள்ள நிலையில், தற்போது வெளியாகி உள்ள படத்தின் முன்னோட்ட வீடியோ எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. 

மேலும் படிக்க | பிக்பாஸ் கமல் விலகல் : உண்மை காரணம் என்ன?

கைரேகை நிபுணராக வித்தியாசமான கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்திருப்பது, சூத்திரதாரியாக அகில இந்திய பிரபல நடிகர் அமிதாப் பச்சன் குரல் கொடுத்திருப்பது படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கிறது. அதிநவீன விஷுவல் எஃபெக்ட்கள், இத்தாலி, ஜார்ஜியா மற்றும் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டுள்ள அழகிய காட்சிகள், பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டேக்கு இடையேயான பற்ற வைக்கும் கெமிஸ்ட்ரி என பல்வேறு காரணங்களுக்காக இந்த காதல் கதை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பல மொழிகளில் படமாக்கப்பட்டுள்ள ராதே ஷியாம், 1970-களில் ஐரோப்பாவின் பின்னணியில் நடக்குமாறு அமைந்துள்ளது. ராதே ஷ்யாமின் சிறப்பு முன்னோட்ட வீடியோவில் காணப்படுவது போல் மிகவும் புதுமையான மற்றும் வித்தியாசமான கதைக்கருவோடு படம் உருவாகியுள்ளது. படத்தின் பாடல்கள், போஸ்டர்கள் மற்றும் டீசர்கள் சாதனை அளவில் பார்வையாளர்களை பெற்றுள்ள நிலையில், முன்னோட்டமும் இணையத்தை புயல் போல் தாக்கியுள்ளது. 

விதிக்கும் காதலுக்கும் இடையே நடைக்கும் மர்ம போராட்டத்தை டீஸர் வெளிப்படுத்தியிருந்த நிலையில், பேச்சுப்பொருளாக மாறியுள்ள முன்னோட்டம் படத்தின் ஆழத்தை இன்னும் வெளிப்படுத்தியுள்ளது. மும்பையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ, ‘ராதே ஷ்யாம்’ படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே அதன் வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. 

 

மேலும் படிக்க | பொண்ணுங்கன்னா பலவீனம் இல்லை..பலம்! வெளியானது எதற்கும் துணிந்தவன் ட்ரைலர்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News