Sandhya Raagam Serial Today's Episode: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் (Zee Tamil Serial) ஒளிப்பரப்பாகி வரும் சீதாராமன், நளதமயந்தி, மாரி, அண்ணா, கார்த்திகை தீபம், மீனாட்சி பொண்ணுங்க போன்ற தொடர்களும் பார்வையாளர்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. அதில், சந்தியா ராகம் சீரியலும் பரவலான கவனத்தை பெற்றுள்ளது. சந்தியா ராகம் சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய மாயா, தனம்.. ஜானகிக்கு காத்திருந்த ஷாக் - சந்தியா ராகம் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சத்தியா ராகம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோட்டில் ஆட்டோ டிரைவரை துரத்திச் சென்று ரகுராமிடம் மாயாவும் தனமும் சிக்க இருந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது இவர்கள் இருவரும் ஒரு வழியாக ரகுராமிடமிருந்து தப்பி விடுகின்றனர். மறுபக்கம் கோவிலில் உட்கார்ந்து இருக்கும் பத்மாவும் பார்வதியும் என்ன செய்வது என தெரியாமல் வருகின்றனர்.
மேலும் படிக்க | கமலை ஓரம் கட்டும் பிக்பாஸ்! 5 நடிகர்களை தேர்வு செய்துள்ள நிறுவனம்!
அதன் பிறகு பக்கத்தில் இருப்பவர்களிடம் போனை வாங்கி ஜானகிக்கு போன் போட்டு மாயாவும் தனமும் காணவில்லை முதலில் அந்த மாயாவ ஊருக்கு அனுப்பி விடு என்று சொல்ல ஜானகி அதிர்ச்சி அடைகிறாள்.
பக்கத்தில் இருக்கும் ரமணியம்மா என்ன என்று கேட்க ஒன்றும் இல்லை என சொல்லி சமாளித்து விடுகிறார். அதன் பிறகு ரகுராமும் வீட்டுக்கு வர மாயாவையும் தனத்தையும் காணவில்லை என்று தெரிய வர எல்லோரும் பதற்றம் அடைகின்றனர்.
பிறகு இருவரும் வீட்டுக்கு வந்ததும் ரகுராம் எங்கே போனீங்க என்று கேட்க ஷாப்பிங் போனதாக சொல்ல அவர் ஜானகியை முறைக்கிறார். பிறகு மேலே ரூமுக்கு வந்த மாயா அம்மா கிஃப்ட்டாக கொடுத்த ப்ளூடூத் ஸ்பீக்கரை வைத்து இதில் பாட்டை கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகமாகவே இருக்கு என வருத்தப்படுகிறார்.
இந்த சமயம் பார்த்து கீழே கார் ஒன்று வந்து நிற்க அதிலிருந்து இறங்குபவர்கள் ரகுராம் இருக்காரா நாங்க ஜீ டிவியில் இருந்து வருகிறோம். ஸ்மார்ட்போனால நல்லதா கெட்டதா என்று பேட்டி எடுக்க வந்திருப்பதாக சொல்கின்றனர்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன? பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு ரகுராம் என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதை அறிந்து கொள்ள சந்தியா ராகம் சீரியல் உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்.
மேலும் படிக்க | சூர்யாவிற்கு திடீர் என நன்றி தெரிவித்த இயக்குனர் அமீர்! ஏன் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ