சீதா ராமன் அப்டேட்: அர்ச்சனாவுக்கு ஆப்பு.. செம ட்விஸ்ட் கொடுத்த ராம்.. அடுத்து என்ன?

Seetha Raman Today's Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 12, 2023, 01:13 PM IST
  • சீதா ராமன் : இன்றைய எபிசோட்.
  • மிகுந்த எதிர்பார்ப்புடன் அர்ச்சனா.
  • சீதாவுக்கு ஷேர் வந்ததை நினைத்து சந்தோசம்.
சீதா ராமன் அப்டேட்: அர்ச்சனாவுக்கு ஆப்பு.. செம ட்விஸ்ட் கொடுத்த ராம்.. அடுத்து என்ன? title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.

சீதா ராமன் : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ராம் ஷேரை அர்ச்சனாவுக்கு எழுதி கொடுக்க எல்லா ஏற்பாடுகளும் நடந்திருந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

மிகுந்த எதிர்பார்ப்புடன் அர்ச்சனா

அதாவது, எல்லாரும் ஷேரை மாற்றி எழுத ஒன்று கூடி இருக்க வீட்டிற்கு விருந்தாளியாக வந்திருக்கும் அர்ச்சனாவின் தங்கை கல்பனா உனக்காக கையெழுத்து போட கோல்ட் பேனா வாங்கி வந்திருக்கேன் என்று எடுத்து கொடுக்க அர்ச்சனா மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறாள். 

அனைவருக்கும் ஷாக்

கடைசியில் செம ட்விஸ்ட்டாக ராம் பேனாவை வாங்கி சீதாவை கையெழுத்து போட சொல்லி கூப்பிட எல்லாரும் ஷாக் ஆகின்றனர், துரை உங்க பேரில் ரெடி பண்ண டாகுமெண்ட் இங்க இருக்கு என்று சொல்லி அதை கிழித்து போட ராம் சொன்ன காரணத்தால் சீதாவும் கையெழுத்து போட அர்ச்சனா கோபத்துடன் ரூமுக்கு சென்று விடுகிறாள். 

மேலும் படிக்க | 73 வயது... உலகத்திற்கே சூப்பர்ஸ்டார்.. ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு எவ்வளவு?

சீதாவுக்கு ஷேர் வந்ததை நினைத்து சந்தோசம்

ரூமில் எனக்கு என்னவோ மகா மேலயே சந்தேகம் இருக்கு என எல்லாரும் ஒன்று சேர்ந்து பேசி கொண்டிருக்க மறுபக்கம் ராம், துரை, மீரா, சத்யன் ஆகியோர் சீதாவுக்கு ஷேர் வந்ததை நினைத்து சந்தோசமாக இருக்கின்றனர். பிறகு மகா எனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என அர்ச்சனாவை சாமாதானப்படுத்தி எல்லாரையும் ஒன்று கூட்ட ராம் டீம் மீண்டும் அர்ச்சனாவை அவமானப்படுத்தி அனுப்புகிறது. 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?

சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | பிக் பாஸில் இருந்து விலகும் கமல்? இவர்தான் அடுத்த தொகுப்பாளர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News