சீதா ராமன் அப்டேட்: சீதா போடும் மாஸ்டர் பிளான்.. மகா எடுக்கும் சபதம்

Seetha Raman Today's Episode Update: சத்யன், மீரா நிச்சயத்துக்காக சீதா போடும் மாஸ்டர் பிளான்.. மகா எடுக்கும் சபதம் - சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 8, 2023, 12:13 PM IST
  • சீதா ராமன் : இன்றைய எபிசோட்
  • சொப்னாவை அறிமுகம் செய்துவைக்கும் சீதா.
  • தன் திட்டத்தை மதுமிதாவிடம் சொல்லும் சீதா.
சீதா ராமன் அப்டேட்: சீதா போடும் மாஸ்டர் பிளான்.. மகா எடுக்கும் சபதம் title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.

சீதா ராமன் : இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சீதா சொப்னாவை வீட்டுக்கு அழைக்க பிளான் செய்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

சொப்னாவை அறிமுகம் செய்துவைக்கும் சீதா

அதாவது மகா சொப்னாவை ஒரு கோவிலுக்கு அழைத்து வந்து இந்த கோவிலில் வேண்டி கொண்டால் உங்க கணவர் சீக்கிரம் வெளியே வந்துடுவாங்க என்று சொல்கிறாள், பிறகு மீரா கோவிலுக்கு வர சீதா சொப்னாவை மீராவுக்கு அறிமுகம் செய்து வைத்து நிச்சயத்துக்கு அழைக்க மீரா அது நடக்குமானே தெரியல, எதுக்கு இதெல்லாம் என்று கேட்கிறாள். 

இதையடுத்து சீதா மீராவை தனியாக அழைத்து சென்று சொப்னா சேதுவின் இரண்டாவது மனைவி என்ற உண்மைகளை உடைக்க அவள் நம்ப மறுக்கிறாள், போட்டோ ஆதாரங்களை காட்ட மீராவும் நம்ப தொடங்குகிறாள். அடுத்து சொப்னாவை நிச்சயத்துக்கு அழைக்க அவளும் கண்டிப்பா வரேன் என்று சொல்கிறாள். 

தன் திட்டத்தை மதுமிதாவிடம் சொல்லும் சீதா

அதனை தொடர்ந்து சீதா மதுமிதாவுக்கு போன் செய்து நாளைக்கு நீ தான் சொப்னா என்பவரை நிச்சயத்துக்கு கூட்டி வரணும் என தன்னுடைய திட்டதை சொல்கிறாள், மேலும் மது சூர்யாவை நினைத்து கண் கலங்க சீதா சூரியாவை கண்டுபிடித்து சேர்த்து வைப்பதாக வாக்கு கொடுக்கிறாள். அடுத்ததாக சத்யனை சந்தித்து நாளைக்கு ஐயரை அழைத்து வர சொல்ல அவன் ஏன் என்று கேட்க சீதா விஷயத்தை சொல்கிறாள். 

பிறகு இரவு நேரம் ஆனதும் ரூமுக்குள் ராம் இங்கிலிஷ் புக் படித்து கொண்டிருக்க சீதா எனக்கு படித்து காட்டுங்க என்று சொல்லி அவன் படிப்பதை கேட்டு கொண்டே தூங்கி விடுகிறாள், கண்ணாடியுடன் தூங்கியதால் ராம் கண்ணாடியை கழட்ட போக சீதா எழுந்து கொள்கிறாள், அவனிடம் தனது நிச்சயதார்த்த பிளானை சொல்ல முதலில் மறுத்து பிறகு சப்போர்ட் செய்வதாக சொல்கிறான். மேலும் சேதுவும் சுபாஷும் வெளியே வரும் விஷயம் கேட்டு கோபப்படுகிறான். 

மேலும் படிக்க | புஷ்பா 2: ஃபஹத் ஃபாசிலின் புதிய லுக்.. பிறந்தநாளில் வெளியான தெறி போஸ்டர்!

சீதாவை வெளியே துரத்த பிளான் போடும் மகா

மறுபக்கம் லாயர் பெயில் கிடைத்து விட்டதாக சொல்லி ஆர்டரை மகாவிடம் கொடுக்க அவள் சந்தோசப்படுகிறாள். அடுத்து சீதாவை வெளியே துரத்தணும் என பிளான் போடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

சீதா ராமன்: : சீரியலை எங்கு பார்ப்பது?

சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | விஜய் - சிவகார்த்திகேயன் படங்கள் மோதல்! அதுவும் இந்த தேதியிலா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News