அடுத்தப்படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் இதான்! வெளியான தகவல்!

ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படத்தின் பணிகள் 2023, ஜனவரி மாதம் தொடங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jun 30, 2022, 01:14 PM IST
  • விக்ரம் படத்தில் சூர்யா சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
  • அடுத்ததாக பாலா படத்தில் நடித்து வருகிறார்.
  • அடுத்த ஆண்டு ரவிக்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
அடுத்தப்படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் இதான்! வெளியான தகவல்! title=

சமீப காலமாக சூர்யா நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தி அதிக வரவேற்பை பெற்று வருகிறது.  அந்த வரிசையில் சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் இவர் வெறும் ஐந்து நிமிடங்களே திரையில் தோன்றினாலும் மொத்த ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கிறார்.  தற்போது நடிகர் சூர்யா பல படங்களில் பிசியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.  பாலா இயக்கத்தில் 'சூர்யா 41' என்கிற படமும், வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' என்கிற படமும் தற்போது சூர்யா கைவசம் உள்ளது.  அதனை தொடர்ந்து டிஜே ஞானவேல், சிறுத்தை சிவா, ஆர்.ரவிக்குமார் மற்றும் சுதா கொங்கரா ஆகிய இயக்குனர்களின் கைவண்ணத்தில் அடுத்தடுத்த படங்களில் சூர்யா நடிக்கவிருக்கிறார்.

மேலும் படிக்க | மாதவன் அனுப்பிய புகைப்படத்தால் கடுப்பான அவரது மச்சான்

இந்நிலையில் இவரது வரவிருக்கும் படங்களில் ஒரு படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  'இன்று நேற்று நாளை' என்கிற அறிவியல் கதையம்சம் கொண்ட படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் ஆர்.ரவிக்குமார், இவர் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து 'அயலான்' என்கிற படத்தை உருவாக்கியுள்ளார்.  இந்த இயக்குனர் அடுத்ததாக நடிகர் சூர்யாவை வைத்து இயக்கவிருக்கிறார், அந்த படத்தில் சூர்யா விஞ்ஞானியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  மேலும் இந்த படத்தின் பணிகள் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ரவிக்குமார் மற்றும் சூர்யா இணையும் இந்த படத்தின் கதை இறுதிநிலையை எட்டிவிட்டதாகவும், படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.  மேலும் படத்தின் நடிக்கப்போகும் மற்ற நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  விக்ரம் படத்தை தொடர்ந்து சூர்யா மாதவன் நடிக்கும் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' மற்றும் அக்ஷய் குமார் நடிக்கும் 'சூரரை போற்று' ஹிந்தி ரீமேக்கிலும் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் படிக்க | மீனாவுக்குத் தூணாக இருந்த அவரது கணவர் வித்யாசாகர் யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News