'பீஸ்ட்' மாஸ் அப்டேட்: தளபதி விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் 2022 பொங்கல் ரிலீசா?

பீஸ்ட் திரைப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறார்கள் என தெரிந்தவுடன் படத்திற்கு புரமோஷன் பற்றி பிரச்சினையே இல்லை என்பது தெளிவாகி விட்டது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 24, 2021, 07:37 PM IST
'பீஸ்ட்' மாஸ் அப்டேட்: தளபதி விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் 2022 பொங்கல் ரிலீசா? title=

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி மாதம் பொங்கல் தினத்தன்று நடிகர் விஜய் நடிப்பில், கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் (Master) படம் வெளியானது. எந்த அளவுக்கு எதிர்பார்க்கப்பட்டதோ அதனை பூர்த்தி செய்யும் அளவுக்கு இந்த படமானது திருப்திகரமாக இருந்தது.

விஜய் ரசிகர்களும் படத்தினை மிகப்பெரிய அளவில் கொண்டாடித் தீர்த்தனர். திரையரங்க உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் கூட  பாக்ஸ் ஆபீஸ் (Box office) வெற்றியையும், நல்ல வசூலையும் படம் பெற்றுத் கொடுத்தது.

ALSO READ: தளபதி விஜய்யுடன் சேர்ந்து நடிப்பதை வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன் பீஸ்ட் பட நாயகி புகழாரம்

இந்த நிலையில் மீண்டும் தளபதி விஜய் அவருடைய அடுத்த படத்தினை இயக்கும் வாய்ப்பை எந்த இயக்குனருக்கு கொடுப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் 'கோலமாவு கோகிலா' படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமாருக்கு அந்த ஜாக்பாட் அடித்தது. அவரும் தீவிர விஜய் ரசிகர் என்பதால் நெல்சனுடைய நீணட நாள் கனவும் நிறைவேறியிருக்கிறது.

பீஸ்ட் திரைப்படத்தினை சன் பிக்சர்ஸ் (Sun pictures) நிறுவனம் தயாரிக்கிறார்கள் என தெரிந்தவுடன் படத்திற்கு புரமோஷன் பற்றி பிரச்சினையே இல்லை என்பது தெளிவாகி விட்டது. இந்நிலையில் பீஸ்ட் படத்தின் கதாநாயகியாக பூஜா ஹெக்டேவும் (Pooja hegde) படத்தின்  இசையமைப்பாளராக அனிருத்தும் இணைந்திருப்பதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

இதற்கிடையே படத்தின் விஜய் (Thalapathy Vijay) சம்பந்தமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில  தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்லதொரு வரவேற்பினை பெற்றது. விரைவிலேயே படப்பிடிப்பு பணிகளை விரைவாக முடித்துவிட்டு அடுத்த ஆண்டு (2022) பொங்கலுக்கு பீஸ்ட் (Beast) திரைப்படத்தினை வெளியிட படக்குழு ஆயத்தமாகி வருவதாக ஒரு தகவல் தற்போது வெளிவந்திருக்கிறது...!!!

இந்த தகவலையொட்டி விஜய் ரசிகர்கள், "அடுத்த பொங்கல் நமக்கு சூப்பர் கலெக்சன் மா!" என்று இப்போதே குஷியாக ஆரம்பித்துவிட்டனர்.!!

ALSO READ:மீண்டும் வளையோசை? கமல், அமலாவை கண் முன் கொண்டு வந்த விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News