‘ஜவான்’ படத்தில் விஜய் இருப்பது உறுதி..? இதுதான் அவர் கதாப்பாத்திரத்தின் பெயர்..!

Vijay Cameo Role in Jawan: ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படத்தில் நடிகர் விஜய் நடித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகிறது.   

Written by - Yuvashree | Last Updated : Aug 19, 2023, 09:56 AM IST
  • ஜவான் படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.
  • இதில், ஷாருக்கான் ஹீரோவாக நடித்துள்ளார்.
  • ஜவான் படத்தில் விஜய் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘ஜவான்’ படத்தில் விஜய் இருப்பது உறுதி..? இதுதான் அவர் கதாப்பாத்திரத்தின் பெயர்..!  title=

பிரபல இயக்குநர் அட்லீ இயக்கியுள்ள படம் ஜவான். இதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ஹீரோவாக நடித்துள்ளார். படம், அடுத்த மாதம் (செப்டம்பர்) திரைக்கு வருகிறது. இந்த படத்தில் நடிகர் விஜய் கேமியோ கதாப்பாத்திரத்தில் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், சினிமா வட்டாரங்களில் உள்ள சிலர் விஜய்யின் கதாப்பாத்திரம் குறித்த சில தகவல்களை வெளியிட்டுள்ளனர். 

ஜவான் திரைப்படம்..

ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கும் ஜவான் படத்தில் நயன்தாரா முக்கிய கதாப்பாத்திரமாக வருகிறார். தமிழ் சினிமாவில் சில படங்களையே இயக்கினாலும் இந்திய அளவில் பிரபலமான இயக்குநராக மாறியுள்ளவர் அட்லீ. இவரது முதல் பாலிவுட் படம் இது. ஜவான் திரைப்படம் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தின் ப்ரிவ்யூ காட்சிகள் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. 

மேலும் படிக்க | செல்வராகவன் படத்தில் நடிக்க இருந்த தனுஷ்-அஜித்..! தடைப்பட்டதற்கு இதுதான் காரணம்..!

பலத்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

ஜவான் படத்தை பார்க்க, தமிழ் திரையுலக ரசிகர்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்திய திரையுலக ரசிகர்களும் ஆவலுடன் காத்துக்காெண்டுள்ளனர். இதற்கு காரணம், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் தமிழ் இயக்குநர் அட்லீ கைகோர்ப்பதுதான். ஷாருக்கானின் படங்கள் எதுவும் 5 வருடங்கள் வெளிவராமல் இருந்தன. சில மாதங்களுக்கு முன்னர் ‘பதான்’ படம் வெளியானது. இது, பான் இந்தியா அளவில் பலத்த வரவேற்பினை பெற்றது. இதையடுத்து வெளிவர இருக்கும் படம், ஜவான். ஷாருக்கான் இதுவரை எடுக்காத அவதாரத்தை இந்த படத்தில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டுமன்றி கடைசியாக 2019ஆம் ஆண்டு ‘பிகில்’ படத்தை இயக்கிய அட்லீ அதன் பிறகு தமிழில் வேறு எந்த படத்தையும் இயக்கவில்லை. முழுக்க முழுக்க ஜவான் படத்தின் மீதே இரண்டு ஆண்டுகளாக கவனம் செலுத்தி வருகிறார். இதனாலும் ரசிகர்கர்கள் இப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர். 

படத்தில் விஜய் இருக்கிறாரா..?

ஜவான் படத்தின் அறிவிப்பு வெளியான போதே, நடிகர் விஜய் இப்படத்தில் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாக பேசப்பட்டது. சில வாரங்களுக்கு முன்பு வெளியான பிரிவ்யூவில் விஜய்யின் கதாப்பாத்திரம் எதுவும் தென்படவில்லை. இருப்பினும், யாராே ஒருவர் முகத்தை மூடிக்கொண்டு சண்டையிடுவது போன்ற காட்சிகள் அதில் பெற்றுள்ளன. இது, விஜய்தானா என ரசிகர்களுக்கு சந்தேகம் எழுந்தது. நடிகர் விஜய்யின் கேமியோ குறித்து பேசப்பட்ட , பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் இதில் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக பேசப்பட்டது. சொன்னது போலவே அவர் கேமியோ ரோலில் இப்படத்தில் நடித்துள்ளார். அதனால், விஜய்யும் இந்த படத்தில் இருக்கலாம் என நம்பப்படுகிறது. 

விஜய்யின் கேரக்டர் இதுதான்..! 

ஜவான் படத்தில் விஜய்யின் கேமியோ கதாப்பாத்திரம் குறித்த தகவலை, சினிமா வட்டாரங்களில் உள்ள சிலர் வெளியிட்டுள்ளனர். அதில் விஜய்யின் பெயர் மற்றும் அவர் ஜவான் படத்தில் எத்தனை நிமிடங்கள் வருகிறார் போன்ற தகவல்களை வெளியிட்டுள்ளனர். 

தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் படி, ஜவான் படத்தில் விஜய்யின் பெயர், “தர்மேஷ்வர்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்யின் காட்சி 1 நிமிடம் அளவிற்கு இடம் பெற்றுள்ளதாகவும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலினால் ரசிகர்கள் பயங்கர குஷியில் உள்ளனர். 

யுனிவர்ஸை உருவாக்கும் அட்லீ..!

ஹாலிவுட் திரையுலகில் உள்ளது போல, தமிழ் சினிமாவிலும் தனியாக மல்டி வர்ஸ் மற்றும் யுனிவர்ஸ்கள் உருவாகி வருகின்றன. இதற்கு பிள்ளையார் சுழி பாேட்டு வைத்து, எல்.சி.யு எனும் சினிமா யுனிவர்ஸை உருவாக்கியவர், லோகேஷ் கனகராஜ். தற்போது அவரைப்போல அட்லீயும் ஜவான் படத்தை வைத்து தனியாக ஒரு யுனிவர்ஸை உருவாக்கவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வெளிவந்துள்ள தகவல்கள் உண்மை என்றால், ஜவான் திரைப்படம் தென்னிந்தியாவில் இருந்து வெளியான ‘பான் இந்தியா’ படங்களிலேயே மிகப்பெரிய வசூலை பெறும் என்று கூறப்படுகிறது. ஆனால், படம் வெளிவந்த பிறகே உண்மை நிலவரம் குறித்து தெரியும். 

மேலும் படிக்க | சைகையிலேயே கலக்கிய கமல்... வந்தது பிக்பாஸ் சீசன் 7 வீடியோ - இதோ முழு விவரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News