ஷாருக்கானின் ஜவான் படத்தில் விஜய் சேதுபதி; இதுதாங்க ரோல்

Vijay Sethupathi Officially Revealed About Jawaan: அட்லி  மற்றும் ஷாருக்கானின் ஜவான் படத்தில் இணைந்த பிரபல தமிழ் நடிகர். அவரே சொன்ன தகவல். வெளியானது வைரல் வீடியோ.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 17, 2022, 03:27 PM IST
  • ஜவான் படத்தின் முக்கிய அப்டேட்
  • ஷாருக்கானுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா
  • நடிகை பிரியாமணி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்
ஷாருக்கானின் ஜவான் படத்தில் விஜய் சேதுபதி; இதுதாங்க ரோல் title=

தமிழில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி.  இந்த படத்தை தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற மாஸ் ஹிட் படங்களை கொடுத்தார்.  பிகில் படத்திற்குப் பிறகு நீண்ட நாட்கள் அமைதியாக இருந்த அட்லி, அடுத்ததாக பாலிவுட் பக்கம் செல்ல இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானை வைத்து அட்லி இயக்க இருப்பதாக செய்திகள் பரவலாக வெளிவரத் தொடங்கின. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட போதிலும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளிவராமல் இருந்து வந்தது.

சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது. முகம் முழுவதும் பேண்டேஜ் சுற்றி இருப்பது போல் ஷாருக்கான் தோற்றமளித்தார், இந்த படத்திற்கு ஜவான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் இந்த படத்தில் நயன்தாரா, யோகி பாபு போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | வடசென்னை-2 படம் எப்போது? உறுதிப்படுத்திய இயக்குனர் வெற்றிமாறன்!

இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். அத்துடன் இதன் தமிழ் ரீமேக்கில் பருத்திவீரன், ராவணன், தோட்டா, மலைக்கோட்டை போன்ற படங்களில் நடித்த நடிகை பிரியாமணி ஒரு முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இந்த படத்தில் காமெடி நடிகர் யோகி பாபுவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் தற்போது சமீபத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காத்துவாக்குல சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி, அனிருத் ரவிச்சந்திரன் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளார். அதில் அனிருத் ரவிச்சந்திரன் விஜய் சேதுபதியிடம் ஜவான் திரைப்படத்தில் நடிக்கிறீர்களா என கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த விஜய் சேதுபதி, ஆம் நாம் ஜவான் படத்தில் நடிக்கிறேன் என்று சொல்லி உறுதி செய்திருக்கிறார். 

இதற்கிடையில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தின் படப்பிடிப்பு புனேயில் தொடங்கி, மும்பை சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அத்துடந் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | புஷ்பா 2: கெட்டப்பை வெளியிட்டு ஆழம் பார்க்கும் அல்லு அர்ஜூன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News