வில்லனாக நடித்து ரசிகர்கள் மனதை வென்ற நடிகர்கள்!

அமிதாப் பச்சன் முதல் ஷாருக்கான் வரை பாலிவுட் நடிகர்கள் தொடங்கி, தமிழில் விஜய் சேதுபதி வரை வில்லனாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர்.  

Written by - RK Spark | Last Updated : Nov 5, 2023, 07:01 PM IST
  • ஷாருக்கான் பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.
  • விஜய் சேதுபதி ஆரம்ப காலத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
  • ரகுவரன் தமிழ் சினிமாவில் முன்னணி வில்லனாக உள்ளார்.
வில்லனாக நடித்து ரசிகர்கள் மனதை வென்ற நடிகர்கள்! title=

விஜய் சேதுபதி

சிறிய கதாபாத்திரங்கில் நடித்து பின்பு ஹீரோவான விஜய் சேதுபதி, ஆரம்பகால படங்களிலும் வில்லனாக நடித்து உள்ளார்.  சுந்தர பாண்டியன் படத்தில் வில்லனாக நடித்து அசத்தினார்.  பின்பு, பேட்ட, மாஸ்டர், ஜவான், விக்ரம் என பெரிய படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.  மேலும் பல தெலுங்கு படங்களிலும் வில்லனாக நடித்து வருகிறார்.

அரவிந்த் சுவாமி

தமிழில் முன்னணி நடிகரான அரவிந்த் சுவாமி சிறிது காலம் நடிப்பில் இருந்து விலகி இருந்தார்.  பின்பு ரீ என்ட்ரி கொடுத்த அரவிந்த் சுவாமி தனி ஒருவன் படத்தில் அசத்தலான மற்றும் ஸ்மார்ட் ஆனா வில்லனாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். வில்லனுக்கான ஒரு ட்ரெண்டை செட் செய்து வைத்தார்.  

மேலும் படிக்க | பிக்பாஸ் 7: பிரதீப்பை தொடர்ந்து வெளியேறிய மற்றொரு போட்டியாளர்! யார் தெரியுமா?

ரகுவரன்

மறக்க முடியாத பல நெகட்டிவ் ரோல்களை நமக்கு வழங்கிய நடிகர்களில் ரகுவரனும் ஒருவர். குறிப்பாக பாட்ஷா, முதல்வன், பூ விழிவாசலிலே, காதலன் போன்ற படங்களில் வில்லனாக நடித்துள்ளார். கோலிவுட்டின் முன்னணி முழுநேர வில்லன்களில் ஒருவராக ரகுவரன் உள்ளார்.

ரன்வீர் சிங்

ரன்வீர் சிங் பாலிவுட்டில் அவரது சிறப்பான மற்றும் வித்தியாசமான நடிப்பிற்காக பெயர் பெற்றவர். ஹீரோவாக நல்ல இமேஜை பெற்று இருந்தாலும், வில்லனாக நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.  இரக்கமற்ற மற்றும் அதிகார வெறி கொண்ட அலாவுதீன் கில்ஜி என்ற கதாபாத்திரத்தில் பலராலும் பாராட்டப்பட்டார். இந்த வரலாற்று பின்னணி கொண்ட பத்மாவத் படத்தை சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி இருந்தார். இந்த படம் விமர்சன ரீதியான பாராட்டுகளையும் பல விருதுகளையும் பெற்றுத்தந்தது.

ஷாருக்கான்

அனைவருக்கும் பிடித்த நடிகராக உள்ள ஷாருக்கான் காதல் திரைப்படங்களில் நடித்து பெண்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.  இருப்பினும் ஷாருக்கான் 'டான்' (2006) மற்றும் 'டான் 2' (2011) ஆகிய படங்களில் வில்லனாக தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். மேலும், 'பாசிகர்', 'டர்' மற்றும் 'அஞ்சம்' ஆகிய படங்களில் அவர் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

ஹிருத்திக் ரோஷன்

கிரேக்க கடவுள் என்று அழைக்கப்படும் ஹிருத்திக் ரோஷன் எப்போதும் நல்ல உடற்கட்டுடன் காணப்படுவார். 'தூம் 2' (2006) படத்தில் துணிச்சலான திருடன் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பட்சன் ஆகியோர் நடித்து உள்ளனர்.  இந்த படம் ஒரு ட்ரெண்டு செட்டராக அமைந்தது.  

அமிதாப் பச்சன்

இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களான அமிதாப் பச்சன் 'டான்' (1978) போன்ற திரைப்படங்களில் வில்லத்தனமான பாத்திரங்களை ஏற்று நடித்தார்.  மேலும், 'ஆங்கே', 'பர்வனா', 'ஃபரார்' மற்றும் 'ராம் கோபால் வர்மா கி ஆக்' ஆகிய படங்களில் எதிர்மறை பாத்திரங்களில் நடித்துள்ளார்.

மற்ற சில நடிகர்கள்

பன்முகத் திறனுக்காக அறியப்பட்ட நடிகர் அம்ஜத் கான், ஷோலே (1975) போன்ற படங்களில் வில்லனாக நடித்தார்.  தனது ஆக்‌ஷன் ஹீரோ படங்களுக்காக கொண்டாடப்படும் தர்மேந்திரா, ஜீவன் மிருத்யு (1970) திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். பாலிவுட்டின் 'முதல் சூப்பர் ஸ்டார்' என்று அழைக்கப்படும் ராஜேஷ் கண்ணா பொதுவாக காதல் வேடங்களில் தான் காணப்படுவார். இருப்பினும், அவர் ரெட் ரோஸ் (1980) படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.  

மேலும் படிக்க | லியோ திரைப்படம்: விஜய்க்கு மகனாக நடித்க மாத்யூ தாமஸ் வாங்கிய சம்பளம் எவ்வளவு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News