பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பிரபல தொகுப்பாளருக்கு விஜய்சேதுபதி உதவி

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொகுப்பாளர் மற்றும் நடிகர் லோகேஷின் மருத்துவ செலவுகளை நடிகர் விஜய்சேதுபதி ஏற்றுள்ளார்.

Last Updated : Mar 12, 2020, 10:06 AM IST
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பிரபல தொகுப்பாளருக்கு விஜய்சேதுபதி உதவி title=

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, பார்த்திபன், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் படத்தில் நடித்தவர் தொகுப்பாளர் லோகேஷ் பாபு. மவலும் இவர் ஒரு தனியார் சேனலில் தொகுப்பாளராகவும் பணிபுரிந்து வந்தார். 

சில நாட்களுக்கு முன்பு இவருக்கு திடீர் உடல் நலக் குறைவின் காரணமாக அவரது இடது கால் மற்றும் இடது கை செயலிழந்து போய் விட்டது. தனது நகைச்சுவை திறமையால் பலரையும் சிரிக்க வைத்து வந்த லோகேஷ், தற்போது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இவரது மருத்துவச் செலவுக்கு நிதியுதவி தேவை என்று சமூக வலைதளத்தில் தகவல்கள் பரவின.

இந்நிலையில் இந்த தகவலை அறிந்த நடிகர் விஜய் சேதுபதி, மருத்துவமனைக்கு நேரில் சென்று, லோகேஷை பார்த்து, உன்னோட மருத்துவ செலவுக்கான பணத்தை நான் தருகிறேன் எனக் கூறியுள்ளார். விஜய் சேதுபதியின் இந்த உதவிக்கு, லோகேஷ் பாபுவின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

 

 

 

Trending News