நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை கண்டு சிலர் அச்சப்படுகிறார்கள் என்று அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜயின் தந்தையும், திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணியில் நிகழும் மகா புஷ்கரம் விழாவில் கலந்து கொண்டார். அப்போது புனித நீராடிய அவர் பாபநாசத்தில் தன்னுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு என கேள்வி எழுப்பினார். வழக்கறிஞர்கள், விவசாயிகள் என பல துறைகளை சார்ந்தவர்கள் அரசியலுக்கு வரும்போது மக்களால் உயர்த்தப்பட்டவர், மக்களுக்கு நல்லது செய்வதற்கு வந்தால் அதில் என்ன தவறு என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும், நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை கண்டு சிலர் அச்சப்படுகிறார்கள்... பயப்படுகிறார்கள். சமீபத்தில் சர்கார் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசிய சில விஷயங்களை தொடர்ந்து அவர் மீது அரசியல் விமர்சனங்களும், கருத்துகளும் பெருகி வருகிறது. இந்நிலையில் நடிகரின் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் அரசியலுக்கு வருவது தப்பில்லை என்று கூறியுள்ளது விஜய் ரசிகர்களை சந்தோசத்தில் ஆழ்த்தியுள்ளது.