இலங்கையில் தொடரும் நெருக்கடி; அதிபர் ராஜபக்சேவின் யோசனையை நிராகரித்த எதிர் கட்சிகள்

இலங்கையில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதிபர் ராஜபக்சே தெரிவித்த யோசனையை எதிர்க்கட்சிகள் நிராகரித்தன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 8, 2022, 04:29 PM IST
இலங்கையில் தொடரும் நெருக்கடி; அதிபர் ராஜபக்சேவின் யோசனையை நிராகரித்த எதிர் கட்சிகள் title=

இலங்கையில் அவசரநிலைக்கு மத்தியில் அரசியல் நிச்சயமற்ற நிலை தொடர்கிறது. இதேவேளை, அதிபர் கோத்தபய ராஜபக்ஷவின் கோரிக்கையை நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான SJB நிராகரித்துள்ளது.  SJB தலைவர் சஜித் பிரேமதாசவை இடைக்கால கூட்டரசாங்கத்தை வழிநடத்த முன்வருமாறு அதிபர் யோசனை கூறியிருந்தார். இதற்கிடையில், நாட்டில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களும் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றன.

அதிபர் ராஜபக்சவின் யோசனையை எமது தலைவர் ஏற்க மறுத்துவிட்டார் என சமகி ஜன பல்வேக்ய கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தனது செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய, பிரேமதாசா மற்றும் பிற முக்கிய தலைவர் ஹர்ஷ் டி சில்வா இருவரையும் ராஜபக்ச அழைத்தார்  என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தலைமையிலான ஆளும் கூட்டணியில் இருந்து பிரிந்த சக்திவாய்ந்த பௌத்த பிக்குகள் மற்றும் குழுக்களும் இடைக்கால அரசாங்கம் அமைக்கும் கோரிக்கைக்கு ஆதரவளித்துள்ளனர்.

மேலும் படிக்க |  இலங்கையில் இந்திய வம்சாவளி மக்களுடன் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துரையாடல்

இதற்கிடையில், அதிபருக்கு அதிக அதிகாரங்கள் வழங்குவதை நீக்கும் நடவடிக்கையுடன் 18 மாத காலத்திற்கு இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான தேசிய வழக்கறிஞர்கள் சங்கத்தின் (BASL) முன்மொழிவுக்கு தனது கட்சி ஆதரவளிக்கும் என்று SJB அறிவித்தது. இந்தக் கோரிக்கைகளுக்கு அதிபர் கோட்டாபய உடன்படவில்லை எனவும் அதனால் தான் நாட்டில் கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கான வழிகள் தெளிவாகவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை நீக்குமாறு SJB வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 2020ல் ராஜபக்சேவுக்கு அதிக அதிகாரங்களை வழங்கியது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளது.  19வது திருத்த சட்டத்தில் அதிபரை விட நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Sri Lanka Crisis: மீண்டும் மீண்டும் இந்தியா நீட்டும் உதவிக்கரம், நெகிழும் இலங்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News