நாட்டின் முதல் ஸ்மார்ட் நெடுஞ்சாலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!!

டெல்லி முதல் உத்தரப்பிரதேசம் மீரட் வரையிலான நாட்டின் முதல் ஸ்மார்ட் நெடுஞ்சாலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்! 

Last Updated : May 27, 2018, 11:02 AM IST
நாட்டின் முதல் ஸ்மார்ட் நெடுஞ்சாலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!!  title=

டெல்லி முதல் உத்தரப்பிரதேசம் மீரட் வரையிலான ஸ்மார்ட் நெடுஞ்சாலையை பிரதமர் மோடி இன்று திறந்துவைத்துள்ளார். இந்த சாலை சுமார் ரூ. 11 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் முதல் ஸ்மார்ட் நெடுஞ்சாலை இதுவாகும். இந்த சாலையானது 132 கி.மீ நெடுஞ்சாலையில் சூரிய மின் சக்தியில் இயங்கும் வகையில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. 

இத்துடன் ஒவ்வொரு 500 மீட்டர் தூரத்திற்கும் மழைநீர் சேமிப்பு வசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும், வாகனங்களின் வேகத்தை சிறப்பு கேமரா மூலம் கணக்கிட்டு அதன் மூலம் அதிகவேகமாக செல்பவர்களுக்கு தானாக அபராத ரசீது வழங்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இந்த சாலையில் பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலையில் இந்தியாவின் 36 நினைவுச்சின்னங்களையும் அமைத்துள்ளனர். இந்த சாலை மூலம் டில்லியின் காற்று மாசு 27 சதவீதம் குறையும் எனவும் தெரிவித்துள்ளனர்.

டில்லி - மீரட் செல்வதற்கான பயண நேரம் 2 மணி நேரத்தில் இருந்து 45 நிமிடங்களாக குறைகிறது. மேலும் இமாச்சலில் இருந்து உ.பி., செல்பவர்களும், ராஜஸ்தானில் இருந்து இமாச்சல் செல்பவர்களும் டில்லிக்குள் வராமலேயே செல்ல முடியும்.

 

Trending News