புழுதி புயலை எட்டி பார்த்த விண்வெளி வீரர் எடுத்த பூமியின் புகைப்படம்

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) பிரெஞ்சு விண்வெளி வீரர் எடுத்த பூமியின் புகைப்படம், அன்னை பூமியின் சக்தியை காட்டுகிறது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 30, 2021, 09:31 AM IST
  • தாமஸ் பெஸ்கெட் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கிறார்.
  • பெஸ்கெட் ஆறு மாதங்கள் இங்கு தங்கியிருப்பார்.
  • பிரெஞ்சு விண்வெளி வீரர் எடுத்த பூமியின் புகைப்படம், அன்னை பூமியின் சக்தியை காட்டுகிறது.
புழுதி புயலை எட்டி பார்த்த விண்வெளி வீரர் எடுத்த பூமியின் புகைப்படம் title=

பாரிஸ்: சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) எடுக்கப்பட்ட பூமியின் சில படங்கள் பேசு பொருளாகவே இருக்கின்றன. மத்திய கிழக்கு ஆசியாவின் (பஹ்ரைன்) சில பகுதிகளில்  ஏற்பட்ட புழுதி புயல் (Sand Storm), விண்வெளியில் இருந்து படமெடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் பிரெஞ்சு விண்வெளி வீரர் தாமஸ் பெஸ்கெட் (French Astronaut Thomas Pesquet) இதனைபகிர்ந்துள்ளார். அவர் இந்த புகைப்படத்திற்கு கொடுத்துள்ள தலைப்பு - 'அன்னை பூமியின் அழகான படங்கள்.

'இதை இதற்கு முன் பார்த்ததில்லை'

தாமஸ் பெஸ்கெட் (Thomas Pesquet) ஒரு பிரெஞ்சு விண்வெளி பொறியாளர், பைலட் மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் விண்வெளி வீரர் ஆவார், தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ளார். பெஸ்கெட் புகைப்படத்தை ட்வீட் செய்து, 'புழுதி புயல்! இதுபோன்ற எதையும் நான் விண்வெளி நிலையத்தில் இருந்து இதுவரை பார்த்ததில்லை, எவ்வளவு பிரம்மாண்டமாக உள்ளது. எத்தனை டன் மணல் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் பறந்திருக்க வேண்டும் என்று தெரியவில்லை. அன்னை பூமிக்கு இருக்கும் சக்தி  அற்புதமானது”

பதிவில் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்

தனது பிளிக்கர் பதிவில், தாமஸ் பெஸ்கெட் இதை கொஞ்சம் விரிவாக விளக்கியுள்ளார். 'பெருநகர பிரான்சின் தெருக்களில் கார்களில் மணல் குவிந்து கிடப்பதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன், இது ஒரு பருவகால நிகழ்வு. ஆப்பிரிக்காவுக்கு பறக்கும் ஒரு விமானியாக இது சில நேரங்களில் ஆபத்தானது என்பதையும் நான் அறிவேன், ஆனால் விண்வெளியில் இருந்து இதுபோன்ற ஒரு காட்சியை நான் பார்த்ததில்லை. இந்த புழுதி புயலில் எத்தனை டன் மணல் வீசியிருக்க வேண்டும் என்று யோசித்துப் பாருங்கள் '.

ALSO READ | விண்வெளியில் துணி குப்பை அதிகமாகி விட்டது, சோப்பு அனுப்ப NASA திட்டம்

பெஸ்கெட் இதற்கு முன்பும் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்

நவம்பர் 2016 முதல் ஜூன் 2017 வரை விமானப் பொறியாளராக தாமஸ் பெஸ்கெட் விண்வெளி சென்றார். மற்றொரு ஆறு மாத பயணத்தின் ஒரு பகுதியாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ளார். அவர் படங்களை பகிர்ந்துள்ளார். அவற்றில் விண்வெளி வீரர்களின், ஸ்பேஸ் வாக் ( Space Walk)  அடங்கும். மற்றொரு புகைப்படத்தில், அவர் சக விண்வெளி வீரர் அகிஹிடோவுடன் உயிர் காக்கும் கருவிகளை ஆய்வு செய்வதைக் காணலாம்.

ALSO READ | இன்னும் 30 ஆண்டுகளில் மனிதர்கள் வேற்று கிரகவாசிகளாக ஆவார்கள்: விஞ்ஞானிகள்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News