மீனை பிடிக்க வந்த பாம்பு; அப்புறம் என்னாச்சி: வீடியோ வைரல்

இதில் ஒரு நபர் ஆற்றங்கரைக்கு சென்று மீன்களை காட்டி மற்ற உயிரினங்களை கூப்பிடுவதை பார்க்கலாம். ஆனால் அதன் பின் என்ன நடந்தது என்பதை உங்களால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 5, 2022, 12:54 PM IST
  • ரகசியமாக வந்த பாம்பு.
  • மீன் மற்றும் பாம்பின் வைரல் வீடியோ.
  • சமூக ஊடகத்தில் வைரலாகும் வீடியோ.
மீனை பிடிக்க வந்த பாம்பு; அப்புறம் என்னாச்சி: வீடியோ வைரல் title=

மீன் மற்றும் பாம்பின் வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

விலங்குகளில், சிங்கம், குரங்கு, நாய், பூனை, சிங்கம், பாம்பு, புலி என இந்த மிருகங்களுக்கு இணையத்தில் தனி மவுசு உள்ளது. இவற்றின் வீடியோக்களை மக்கள் மிகவும் விரும்பி பார்க்கிறார்கள். சமீப காலங்களில் பாம்புகளின் வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. தற்போதும் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. அதில், ஒரு நபர் ஆற்றின் கரையில் சென்று மீன்களை கையில் எடுத்திருப்பதை காணலாம். அதைக் காட்டி மற்ற உயிரினத்தை அவர் கூப்பிடுவதையும் நாம் காணலாம். ஆனால் அதன் பின் என்ன நடந்தது என்பதை உங்களால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.

மேலும் படிக்க | திருமணத்தில் மணமகன் செய்த வேலை: ஷாக் ஆன மணமகள், வீடியோ வைரல்

தண்ணீரிலிருந்து வெளிவந்த பாம்பு
வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஆற்றின் கரையில் ஒருவர் கையில் சிறிய மீனுடன் அமர்ந்திருப்பதை நீங்கள் காண்பீர்கள். அதைக் காட்டி வேறொரு உயிரினத்தை அவர் அழைக்கிறார். சிறிது நேரம் கழித்து ஒரு உயிரினம் வெளியே வருகிறது. ஆனால் அந்த உயிரினம் நபரிடம் நெருங்கும்போது, ​​அந்த நபரின் நிலை மோசமடைகிறது. உண்மையில், வெளியே வந்த உயிரினம் பாம்பாகும்.

வீடியோவை இங்கே பார்க்கவும்

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

கடைசியில் அந்த பாம்பு அந்த நபரின் கையிலிருந்து மீனை எடுத்துக்கொண்டு மீண்டும் தண்ணீருக்குள் சென்றதைக் காணலாம். தற்போது இந்த வீடியோ @thenextcatch என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மேலும் படிக்க | ‘ஓடிருடா கைப்புள்ள’: பாகற்காயை ருசி பார்த்த குரங்கு, வைரலாகும் மாஸ் ரியாக்‌ஷன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News