விராட் கோலியை கண்டுபிடித்து தாருங்கள்... ICC-ன் அதிர்ச்சி ட்வீட்...

சரி போகட்டும், இந்த சவால் எளிதான சவாலா அல்லது கடினமானதா? உங்கள் பதில் என்ன?

Last Updated : Apr 1, 2020, 04:53 PM IST
விராட் கோலியை கண்டுபிடித்து தாருங்கள்... ICC-ன் அதிர்ச்சி ட்வீட்...

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) புதன்கிழமை ட்விட்டரில் அதன் ஆதரவாளர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான சவாலை வெளியிட்டது. இந்த சவாலின் ஒரு படியாக ICC ஒரு படத்தை வெளியிட்டு, கிரிக்கெட் ஆர்வலர்களை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை "கே.எல். ராகுல் கடலில்" இருந்து கண்டுபிடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதொடர்பான பதிவில் ICC குறிப்பிட்டுள்ளதாவது., "கே.எல்.ராகுலின் இந்த கடலில் விராட் கோலியை நீங்கள் கண்டுபிடிக்க முடியுமா" என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த படத்தை பார்த்து நீங்கள் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில், இது ICC-யின் ஏப்ரல் முட்டாள்கள் தினம் போட்டி என்று நினைக்காலம், ஆனால் நீங்கள் அவ்வாறு நினைத்தால் நீங்கள் தவறு செய்துவிட்டீர் என்று தான் அர்த்தம். ஏனெனில், இந்த புகைப்படத்தில் இந்திய கிரிக்கெட் கேப்டனும் உள்ளார். நெட்டீசன்கள் சிலரும் தங்கள் அபார திறமையினை கொண்டு விராட் கோலியை கண்டுபிடித்து ICC-க்கு பதில் அளித்துள்ளனர்.

இந்த பதிவு வெளியானதிலிருந்து பலரும் தேடுதல் வேட்டையினை துவங்கியுள்ளனர். மேலும் இந்த ட்விட்டர் பதிவும் தற்போது வைரலாகி வருகிறது எனலாம். விராட்டைக் கண்டுபிடிக்க முடிந்தது என்று பகிர்ந்து கொள்ள நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் பகுதிக்கு நம்மை அழைத்துச் சென்றனர். பல பயனர்கள் இது மிகவும் எளிதான சவால் என்று கூட குறிப்பிட்டுள்ளனர்.

புகைப்படத்தின் மூன்றாவது வரிசையில் விராட் கோலியின் புகைப்படம் கீழே இருந்து வைக்கப்பட்டுள்ளது. எனினும் கிரிக்கெட் வீரரின் இரு முகங்களிலும் உள்ள தாடி இருவருக்கும் இடையேயான வித்தியாசத்தை கண்டறிய மிக பெரிய சவாலை தூண்டுகிறது.

சரி போகட்டும், இந்த சவால் எளிதான சவாலா அல்லது கடினமானதா? உங்கள் பதில் என்ன?

More Stories

Trending News