ஒருவரின் வாழ்க்கையில் ஆசிரியரின் பங்கு என்பது மிகவும் முக்கியமானது. மாணவர்கள் தங்களை மெருகேற்றி கொள்வதற்கு ஆசிரியர்கள் அவசியமாகிறார்கள். அந்த வகையில், 30 ஆண்டுகள் கழித்து, விமானத்தில் தனது பள்ளிக்கால ஆசிரியரை பார்த்து, கண்ணீர்விட்டு விமானப் பணிப்பெண் ஒருவரின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
"நேற்று நாங்கள் கனடாவில் இருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு விமானம் மூலம் சென்றோம். அப்போது ஆசிரியருக்கும், அவரது மாணவருக்கும் இடையிலான இந்த நீண்ட காலத்திற்கு பின்னான சந்திப்பு. இதுதான் சிறந்த சர்வதேச ஆசிரியர்கள் தினம்" என இன்ஸ்டாகிராம் பதிவர் ஒருவர் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.
மேலும் படிக்க | சிகரெட்டில் மாஸ் காட்டும் தாத்தா: பார்த்தா சிரிக்காம இருக்க முடியாது, வைரல் வீடியோ
அந்த வீடியோவில் விமான பணிப்பெண்ணான லோரி, விமானத்தின் மைக்கில், அந்த விமானத்தில் பயணிக்கும் அவரது பள்ளி ஆசிரியரை நன்றி தெரிவித்தார். அதில்,"இன்று தேசிய ஆசிரியர் தினம், எனவே நம் வாழ்நாள் முழுவதும் நமக்கு பிடித்த ஆசிரியர்களை நாம் அங்கீகரிக்க வேண்டும். நான் இப்போது உணர்ச்சிவசப்படப் போகிறேன், ஆனால் இன்று நான் 1990இல் எனது பள்ளி ஆசிரியையான ஓ'கானல் இந்த விமானத்தில் இருந்ததைப் பார்த்தேன்.
அவர் எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியை, 1990க்கு பின் நான் அவரை பார்க்கவில்லை. இந்தப் பெண் என்னை ஷேக்ஸ்பியரை நேசிக்க வைத்தவர், என்னை பியானோ வாசிக்க வைத்தார். நான் பியானோவில் முதுகலை முடித்துவிட்டேன். என்னால், ஒரு கட்டுரை எழுத முடியும். நன்றி, ஓ'கானல். நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன்" என மைக்கில் பேசிவிட்டு, குடுகுடுவென ஓடி தனது ஆசிரியரை அவர் கட்டிபிடித்துக்கொண்டார்.
அவர்களை விமானத்தில் இருந்தவர்கள் கரகோஷம் எழுப்பி வாழ்த்தினர். மேலும், அந்த காட்சி விமானத்தில் இருப்பவர்களை மட்டுமின்றி வீடியோவை பார்ப்பவர்களையும் கண்கலங்க வைத்தது. இந்த வீடியோ அக்டோபர் 5ஆம் தேதி எடுக்கப்பட்டுள்ளது. கனடாவில் அந்த தினத்தன்று, ஆசிரியர்கள் பாராட்டு தினமாக கொண்டாடப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | வைரலாகும் தமிழக மாணவர்கள் மற்றும் ஆந்திர சுங்கச்சாவடி ஊழியர்கள் மோதல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ