பார்த்தா சிரிக்காம இருக்க முடியாது: குப்புற விழுந்த குட்டி யானை, வைரல் வீடியோ

Funny Elephant Video: இணையத்தை கலக்கும் குட்டி யானை. குட்டி யானைவின் வேடிக்கையான செயல் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 20, 2022, 11:37 AM IST
  • விலங்குகளின் வேடிக்கையான அசைவுகள் கேமராவில் படம்பிடிக்கப்பட்டால், அவை சமூக வலைதளங்களில் மிகவும் ரசித்து பார்க்கப்படுகின்றன.
  • இந்த வீடியோக்கள் காண்பதற்கு சுவாரசியமாகவும் வேடிக்கையாகவும் இருக்கின்றன.
  • இவை ஆன்லைன் பயனர்களை மிகவும் மகிழ்விக்கின்றன.
பார்த்தா சிரிக்காம இருக்க முடியாது: குப்புற விழுந்த குட்டி யானை, வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணையத்தில் பகிரப்படும் விலங்குகளின் வீடியோக்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பொதுவாக நாம் காண முடியாத, காண்பதற்கு மிக அரிதான பல விஷயங்களை நாம் இந்த வீடியோக்களில் காண்கிறோம். இணையத்தில் ஒவ்வொரு நாளும் புதிய வீடியோக்கள் வெளியிடப்பட்டு வைரலாகி வருகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களே பெரும்பாலும் அதிகமாக இருக்கின்றன. அதுவும், பாம்பு, யானை, பூனை, குரங்கு போன்ற விலங்குகளுக்கு இணையத்தில் தனி மவுசு உள்ளது. 

விலங்குகளின் வேடிக்கையான அசைவுகள் கேமராவில் படம்பிடிக்கப்பட்டால், அவை சமூக வலைதளங்களில் மிகவும் ரசித்து பார்க்கப்படுகின்றன. இந்த வீடியோக்கள் காண்பதற்கு சுவாரசியமாகவும் வேடிக்கையாகவும் இருக்கின்றன. இவை ஆன்லைன் பயனர்களை மிகவும் மகிழ்விக்கின்றன. அப்படிப்பட்ட குட்டி யானையின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ட்விட்டரில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், குட்டி யானையின் தாய் தனது குட்டிக்கு மேட்டில் இருந்து கீழே இறங்க கற்றுக்கொடுக்கிறது. தாய் யானை முதலில் எழுந்து நின்று கால்களை வளைத்துக்கொண்டே மெதுவாக இறங்குகிறது. தாய் யானை தனது குழந்தை புரிந்துகொள்ளும் வகையில் மெதுவாக இந்த செயல்முறையைச் செய்கிறது. குட்டி ஜம்போ யானை தனது தாயை முழு கவனத்துடன் பார்த்து கற்றுக்கொள்ள முயற்சிக்கிறது. இருப்பினும், வீடியோவில் அடுத்து நடப்பதை பார்த்தால் குபீரென்று சிரிப்புதான் வரும். 

மேலும் படிக்க | ‘தொட்டு தொட்டு விளையாடலாமா?' மீனை கொஞ்சும் பூனை: வைரல் வீடியோ

குட்டி யானையின் காமெடி வீடியோவை இங்கே காணலாம்: 

உருண்டு எழுந்த குட்டி யானை 

குட்டி யானை தனது தாயைப் பின்பற்றும் முயற்சியில் கால்களை மடக்கி முன்னேற முயற்சிக்கிறது. ஆனால், அச்சம் காரணமாக அதனால் அதற்கு பிறகு ஒன்றும் செய்ய முடியவில்லை. ஜம்போ தனது கால்களை தரையில் தொடுவதற்கு தன்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறது. ஆனால் அதற்கு தோல்வியே கிடைக்கிறது. அதன்பிறகு, ஜம்போ மேட்டின் கீழே உருண்டு விழுகிறது. இது தானே எதிர்பார்க்காமல் உருண்டு விழுந்துவிட்டதா அல்லது வேண்டுமென்றே விழுந்து கீழே இறங்க ஒரு தனி முறையை பின்பற்றியதா என்பது விளங்கவில்லை. அங்கிருந்த மற்ற யானைகளும் குட்டி யானைகளின் செயல்பாட்டைக் கண்டு வியப்படைகின்றன.

குட்டி யானையின் வீடியோ வைரலானது

இந்த வீடியோவை ட்விட்டரில் "buitengebieden" என்ற பக்கம் பகிர்ந்துள்ளது. 37 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ இதுவரை 9.7 மில்லியன் வியூஸ்களைப் பெற்றுள்ளது. சமூக ஊடக பயனர்கள் இந்த வீடியோவை மிகவும் விரும்பி ரீட்வீட் செய்து வருகின்றனர். இந்த யானை வேடிக்கையான வீடியோவிற்கு பயனர்களிடமிருந்து பல கமெண்டுகள் வந்த வண்ணம் உள்ளன. 

ஒரு பயனர், 'அந்த யானை குட்டியாக இருந்தாலும், தனக்கென ஒரு தனி வழியை உருவாக்கியுள்ளது.' என எழுதியுள்ளார். மற்றொருவர், 'இது தன்னம்பிக்கை கொண்ட ஒரு யானை' என கமெண்ட் செய்துள்ளார். இதைத் தவிர, யானைக்கு விழுந்ததில் காயம் எதுவும் வந்திருக்க கூடாது என்றும் பலர் அக்கறை காட்டியுள்ளனர். 

மேலும் படிக்க | ‘ஷ்ஷ்..அழாத’ தட்டிக்கொடுத்து ஆறுதல் சொல்லும் குரங்கு: நெஞ்சை அள்ளும் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News