விசுவாசத்தை மட்டுமில்ல, சுறுசுறுப்பையும் குத்தகை எடுத்திருக்கேன்! நாய்க்குட்டி வீடியோ வைரல்

Viral Video:  போர் அடிப்பதால் விளையாடுகிறதா இல்லை அதன் இயல்பே அதுதானா? சுறுசுறுப்பாய் துள்ளி குதிக்கும் நாய்க்குட்டி வீடியோ

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 14, 2023, 03:19 PM IST
  • போர் அடிப்பதால் விளையாடுகிறதா?
  • சுறுசுறுப்பாய் துள்ளி குதிக்கும் நாய்க்குட்டி
  • ஜாலியாய் விளையாடு மாமூ! வீடியோ வைரல்
விசுவாசத்தை மட்டுமில்ல, சுறுசுறுப்பையும் குத்தகை எடுத்திருக்கேன்! நாய்க்குட்டி வீடியோ வைரல் title=

ஜாலி நாய்க்குட்டி வைரல் வீடியோ: இணையத்தில் தினமும் கணக்கில்லாத அளவு விடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் தான் அனைவரின் மனதையும் கொள்ளைக் கொள்கின்றன. மனதை மிகவும் லேசாக்கி, அன்றாட நடைமுறையில் இருந்து சற்று ஆசுவாசம் அடைய, இணையத்தில் வைரலாகும் வீடியோக்கள் உதவுகின்றன. நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் சமூக ஊடகங்களில் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் உள்ளது. 

நமது கைக்குள் அடங்கும் நவீன தொழில்நுட்பமான இணையதளங்களையும் சமூக ஊடகங்களையும் ஆக்ரமித்திருக்கும் வீடியோக்கள், செல்ல பிராணிகளின் சுட்டித்தனமான தருணங்கள் பார்ப்பதற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கின்றன.

மேலும் படிக்க | சின்னப்புள்ளையா இருக்கும்போது இப்படித்தானே விளையாடினீங்க? ஞாபகம் வருதே.... வீடியோ வைரல்

தற்போது ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி வரும் வீடியோவில், வீட்டில் இருக்கும் செல்ல நாய்க்குட்டியின் குறும்பும், ஜாலியான விளையாட்டும், உற்சாகத் துள்ளலும் வைரலாகி வருகிறது. அப்படி உற்சாகமாக விளையாடும் இந்த வீடியோவைப் பார்த்தால் உற்சாகம் பொங்கும்...

போர் அடிப்பதால் விளையாடுகிறதா இல்லை அதன் இயல்பே அதுதானா என்று தெரியவில்லை என்றாலும், துள்ளி குதிக்கும் நாய்க்குட்டியில் ஆவல் அனைவருக்கும் உற்சாகமூட்டுகிறது.

மேலும் படிக்க | Viral Video: முதல் முத்தம் கொடுத்த போதை... தலைகால் புரியாமல் சுற்றும் நாய்!

உற்சாகத்தில் ஓடி ஓடி தனியாகவே பந்தை எடுத்தும் தூக்கிப்போட்டும் விளையாடும் நாய்க்குட்டியின் துள்ளல் ஆச்சரியமானது. அதிலும் சாலையில் இருந்து, கீழே ஓடும் நீரோட்டத்திற்குள் பந்தை தூக்கிப்போட்டுவிட்டு, வெகுதூரம் ஓடிச்சென்று பந்தை எடுத்து வந்து மீண்டும் நீருக்குள் பந்தை தூக்கிப் போடும் விளையாட்டு போரடிக்கலையா என்று கேட்கவும் தோன்றுகிறது.

ஆனால், இயற்கை எழில் கொஞ்சும் இடத்தின் ரம்யமான தோற்றமும், நீரோட்டமும், நாய்குட்டியின் உற்சாகமும் மனதிற்கு இதமாக இருக்கிறது. சமூக ஊடகங்களில் ரசிக்கப்படும் இந்த வீடியோவை பலரும் ரசித்து பார்க்கின்றனர், நாய்க்குட்டிகள் விசுவாசத்திற்கு பேர் போனவை. ஆனால், சுறுசுறுப்புக்கும் நாங்க தான் என்றுசொல்லும் இந்த வீடியோவைப் பார்த்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது.

அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்களில் நாய்க்குட்டிகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.  

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | கியூட்டா ஒரு கேட்வாக்: அசத்தும் நாய் மாடல்கள்.. வியக்கும் நெட்டிசன்ஸ்!! வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News