புதிய கல்விக் கொள்கை: BJP-ன் உண்மை முகம் தெரிய துவங்கிவிட்டது!

பா.ஜ.க. அரசின் உண்மையான முகம் தெரிய தொடங்கிவிட்டது என்று முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்!!

Last Updated : Jun 2, 2019, 12:03 PM IST
புதிய கல்விக் கொள்கை: BJP-ன் உண்மை முகம் தெரிய துவங்கிவிட்டது! title=

பா.ஜ.க. அரசின் உண்மையான முகம் தெரிய தொடங்கிவிட்டது என்று முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்!!

மத்திய அரசு வரும் கல்வியாண்டில் புதிய கல்விக் கொள்கை 2019-ஐ அறிமுகம் செய்ய உள்ளது. இதற்கான வரைவை தயாரிக்கும் பணியல் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டிருந்தது. புதிய கல்வி கொள்கை வரைவில், மும்மொழிக் கல்வி கட்டாயப்படுத்த வேண்டும் என்ற கொள்கை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

இந்த மும்மொழி கொள்கையானது, தாய் மொழி, இணைப்பு மொழியான ஆங்கிலம், வேறு இந்திய மொழி என்பதாகும். இதில், இந்தியைத் தாய்மொழியாக இல்லாத மாநிலங்களில், தாய்மொழி, ஆங்கிலம், ஏதேனும் இந்திய மொழிகளில் இந்தியை கட்டாயம் தேர்வு செய்ய வேண்டும் என வரைவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மும்மொழி திட்டத்திற்கு பலரும் தங்களின் கண்டனத்தை தெரிவிவ்த்து வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். 

அதில், "பா.ஜ.க. அரசின் உண்மையான முகம் தெரிய தொடங்கிவிட்டது. புதிய கல்வி கொள்கையில் பள்ளிகளில் முதல் வகுப்பில் இருந்தே மும்மொழித் திட்டம் என்று அறிவித்து இருக்கிறார்கள். பள்ளிகளில் மும்மொழி திட்டம் என்றால் என்ன அர்த்தம்? இந்தி மொழியை கட்டாயப் பாடமாக்குவார்கள் என்று பொருள்.

இந்தி மொழி கட்டாய பாடம் என்றால் இந்தி திணிப்பு என்று பொருள். பா.ஜ.க. தேர்தல் அறிக்கையிலேயே இந்தி திணிப்புக்கு கொடி அசைத்திருந்தார்கள் என்பதை நான் தேர்தலின் போதே சுட்டிக்காட்டி இருந்தேன். சமஸ்கிருத மொழியை பரப்புவோம் என்று பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. இந்த முயற்சிக்கு தேர்தல் அறிக்கை சூட்டிய தலைப்பு ‘பாரதிய மொழி கலாசாரம்’ என ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

 

Trending News