பதுங்கிப் பாய்ந்து வெற்றிகரமாக பபூன் வேட்டையாடும் சிறுத்தை

வேட்டையாடுவது என்பது நுணுக்கமானது... பதுங்கி, பொறுமையுடன் காத்திருந்து குறி பார்த்து சமய சந்தர்ப்பம் பார்த்து நிகழ்த்தப்படும் வேட்டை வெற்றியை கொடுக்கும். இந்த வீடியோவில் வேட்டையின் சாதுர்யம் புரியும்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 22, 2022, 05:00 PM IST
  • பதுங்கினாலும் வேட்டையாகும் விலங்கு
  • பாய்ந்து வேட்டையாடும் சிறுத்தையின் சாதுரிய வேட்டை
  • சிறுத்தையிடம் சிக்கி சின்னாபின்னமாகும் பபூன்
பதுங்கிப் பாய்ந்து வெற்றிகரமாக பபூன் வேட்டையாடும் சிறுத்தை title=

விலங்குகளின் வேட்டைகள் திகிலையும், திகைப்பையும் வியப்பையும் கொடுப்பவை. சிறுத்தையின் இரை வேட்டை கடுமையான தாக்குதல் வேட்டையாக இருக்கும்.

தாக்குதல் என்பது திடீரென நடப்பது தானே? அதுவும் காட்டில் இருக்கும் விலங்குகளின் வேட்டையானது திரில்லிங்கானது.  

அண்மைக்காலமாக இணையதளங்களில் விலங்குகளின் வேட்டை வீடியோ வைரலாகிவருகிறது. விலங்குகளின் சாமார்த்தியமும் பதுங்கிப் பாயும் குணமும், கூர்மையான அனுமானிப்பும் ஆச்சரியமாக இருக்கின்றன.

திடீர் தாக்குதல்களை எதேச்சையாக வீடியோ பதிவு செய்தவர்கள், அதை சமூக ஊடகங்களில் பதிவிடுகின்றனர். அவை, பலரின் விருப்பத்திற்குரிய வீடியோவாக மாறி வைரலாகிறது.

மேலும் படிக்க | பாய்ந்து துரத்தும் சிறுத்தை: பதறியோடும் விடாது துரத்தும் சிறுத்தை

இணையதளங்களில் வெளியாகும் வீடியோக்களில் சில பலராலும் ரசிக்கப்பட்டாலும், அவை ஏற்படுத்தும் அச்சமும் திகைப்புமே அவை வைரலாவதற்கு காரணமாக இருக்கின்றான. 

குறிப்பாக விலங்குகளின் வீடியோக்களும், வேட்டையாடும் விலங்கு வீடியோக்களும் அதிக அளவில் வைரலாகின்றன. வேட்டைக்கார சிறுத்தையின் வீடியோ ஒன்று சமீபகாலமாக பலரால் பார்க்கப்பட்டு பகிரப்பட்டுள்ளது.

இந்த வேட்டை வீடியோவை பார்த்த பிறகு உங்கள் கருத்து என்னவாக இருக்கும்?

பதுங்கியிருக்கும் சிறுத்தை, தொலைவில் இருக்கும் பபூன் குரங்கை பார்த்து விட்டது. நிதானமாக பதுங்கிப் பதுங்கி பாய்வதும், ஒரே தாவலில் பபூன் குரங்கின் கழுத்தைப் அடித்து. தூக்கிச் செல்லும் காட்சியும் திகைக்க வைக்கிறது.

மேலும் படிக்க | கர்ஜனையால் காட்டை உலுக்கும் சிங்கம்

இந்த வீடியோ காட்டில் எடுக்கப்பட்டுள்ளது. சிறுத்தை இருக்கும் இடத்திற்கு அருகில் யானை மந்தை ஒன்றும் செல்வதை பார்க்க முடிகிறது. விலங்குகளின் சாம்ராஜ்ஜியத்தில் வேட்டை என்பதே வாழ்க்கையின் நியதி.

பலவான் வாழ்வான், பலவீனமானவன் வீழ்வான். காட்டில் வேட்டையும், இரையும் வேட்டைக்காரனும் என கடிகார சுற்றில் விலங்குகளின் வாழ்க்கை அமைந்துள்ளது.

சிறுத்தைக்கு இரையாகும் பபூன் குரங்கு, முதலில் மண்ணிலிருக்கும் உணவை இரையாக எடுக்க முயற்சிக்கிறது. ஆனால் இரையைத் தேடும் விலங்கே இரையாவதும், வேட்டைக்காரரே வேட்டையாடப்படுவதும் காட்டின் நியதி.

மேலும் படிக்க | பதுங்குக்குழியில் பதுங்கினாலும் பாய்ந்து வேட்டையாடும் சிறுத்தையின் பாதள வேட்டை

உண்மையில் இது காட்டின் நியதி மட்டும் அல்ல. ஒரு புறம் பார்த்தால், இதுதான் இயற்கையின் நீதி. வல்லவன் வாழ்வான் என்றாலும், கால சூழ்நிலை மாறும்போது வல்லவனுக்கும் வீழ்ச்சி உண்டு என்பதை மறுக்க முடியாது.

வைரலாகும் இந்த வீடியோ, சிறுத்தையின் விடா முயற்சியையும், விலங்கை வேட்டையாடும் அதன் திறமையையும் காட்டுகிறது. திகைப்பைத் தரும் இந்த வீடியோ கூகுளில் டிரெண்டிங் ஆகிறது.

சில நொடிகள் மட்டுமே இருக்கும் இந்த வீடியோ, அதிர்ச்சியையும் வியப்பையும் ஒரே சமயத்தில் ஏற்படுத்துகிறது.

மேலும் படிக்க | Viral Video: அட இது நான் தானா... குரங்கு குட்டியின் க்யூட் ரியாக்‌ஷன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

Trending News