Dicky Snake: டிக்கிக்குள் டிக்கிலோனா செய்யும் பாம்பு! லந்து பண்ணும் பாம்பை லபக்கிய நபர்

Snake Viral Video: காரில் சுருண்டு படுத்திருக்கும் பாம்பை வெளியேற்றும் தைரியசாலியின் வீடியோ இணையத்தில் வைரலாகிறது. இவருக்கு, பாம்புபிடி வீரர் என்று பட்டம் கொடுக்கலாமா?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 29, 2023, 12:03 PM IST
  • டிக்கியில தான இருக்கேன்? ஏன் தொல்லை பண்ற? சீறும் பாம்பு வீடியோ
  • காரில் இருந்து வெளியேற அடம் பிடிக்கும் பாம்பு
  • அடம் பிடிக்கும் பாம்பின் தலையை தட்டும் டிரைவர்
Dicky Snake: டிக்கிக்குள் டிக்கிலோனா செய்யும் பாம்பு! லந்து பண்ணும் பாம்பை லபக்கிய நபர் title=

பாம்பு பிடி வைரல் வீடியோ: இணையம் ஒரு தனி உலகமா? இந்த கேள்விக்கு இல்லை என்பதே அனைவரின் பதிலாக இருக்கும். பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்ள உதவும் இணையதளமும், சமூக ஊடகங்களும் நமக்கு உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் விசயத்தையும் உடனடியாக நம்மிடம் கொண்டு வந்து சேர்த்துவிடுகிறது. இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பொழுதுபோக்காகவும், பயனுள்ள பல தகவல்களை கொடுக்கும் தளமாகவும் மாறிவிட்டது.

இணையதளங்களும், ஊடகங்களும் கேளிக்கைக்கான ஒரு வழியாக இருந்தாலும், நாம் பார்க்கவே முடியாத பல விஷயங்களை நமக்கு கொண்டு வந்து சேர்க்கிறது. இதில் பொழுதைப் போக்க நாம் பாக்கும் பல வீடியோக்கள் நம்மை கவர்ந்து, நமது பொழுதையே போக்கிவிடுகின்றன.

மேலும் படிக்க | யார் ஜெயிச்சாலும் பரிசு ‘தங்க மீன்’! நோ வெள்ளி வெண்கலம் ப்ளீஸ்! வைரலாகும் நீச்சல் போட்டி!

நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்களை பார்த்தால், நமது பொழுதே போறமாட்டேன் என்கிறது.

அதிலும், விலங்குகளின் வீடியோக்களைப் பார்க்கத் தொடங்கினால், அடுத்தடுத்து வரும் வீடியோக்களுக்கு நாம் ரசிகராகிவிடுகிறோம்.விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் கண்டு மகிழ்கிறோம்.

பாம்புகளுக்கு இணையத்தில் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. சமீபத்தில் ஒரு வீடியோ இணையத்தில் வெளிவந்துள்ளது. அதில் ஒரு நபர், தனது காரில் சுருண்டு படுத்திருக்கும் பாம்பை வெளியேற்றுவதைப் பார்க்கலாம்.

மேலும் படிக்க | பகையாளியா பங்காளியா? குஸ்தி போடும் சிங்கங்களின் மூர்க்கச்சண்டை வீடியோ வைரல்

உண்மையில், அவர் பாம்பை காப்பாற்றுகிறாரா இல்லை தன்னை பாம்பு கடிக்காமல் காப்பாற்றுகிறாரா என்று தெரியவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பொதுவாக, பாம்புகள் விஷத்தன்மை கொண்டவை என்பதால், பாம்பைக் கண்டால் படையே அஞ்சும் என்று சொல்கிறோம். யாருமே பாம்புகளின் அருகில் செல்ல விரும்புவதில்லை, ஆனால், அவை நாம் இருக்கும் இடத்திற்கு வந்துவிட்ட்டால் என்ன செய்வது?

இந்த சவாலை சமாளிக்கும் மனிதர், தனது காரின் பின்புறத்தில் மறைந்திருக்கும் பாம்பை எப்படி லாவகமாக வெளியேற்றுகிறார் என்பதைக் காட்டும் வீடியோ இது. இணையத்தில் வெளியான இந்த வீடியோவுக்கு லைக்குகள் அள்ளுகின்றன.

அச்சமில்லாமல் பாம்பை பாதுகாப்பாக வெளியேற்றுவதைப் போல நமக்குத் தோன்றினாலும், உண்மையில் அந்த நொடியில் அவர் மனநிலை எப்படி இருந்திருக்கும்?  

மேலும் படிக்க | ஹெல்மெட் ..கூலிங் கிளாஸூடன் ரைடிங் புறப்பட்ட நாய்; வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News