சிங்க நடை போட்டு வரும் அரிமாவை கண்டு பிடரி மயிர் தெறிக்க ஓடும் பெண் சிங்கங்கள்

இணையத்தில் வைரலாகும் பல வீடியோக்களில் காட்டப்படும் சில விஷயங்கள் நம்மை சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 7, 2022, 09:36 PM IST
சிங்க நடை போட்டு வரும் அரிமாவை கண்டு பிடரி மயிர் தெறிக்க ஓடும் பெண் சிங்கங்கள் title=

இணையத்தில் வைரலாகும் பல வீடியோக்களில் காட்டப்படும் சில விஷயங்கள் நம்மை சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சோகத்தை மறந்து சிரிக்க வைக்கும் பல வீடியோக்கள் அவ்வப்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகின்றன. தற்போதும் அது போன்ற, வேடிக்கையான, சுவாரசியமான வீடியோ ஒன்று இணையத்தை கலக்கி வருகின்றது.

சிங்கம் ஒன்று தூரத்தில் வருவதைப் பார்த்து பிற சிங்கங்கள் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று பறந்து ஓடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ, இன்ஸ்டாகிராமில் 'animals_powers' என்ற பக்கத்தில் பகிரபட்டுள்ளது.

சிங்க நடை போட்டு வரும் அரிமாவை கண்டு பிடரி மயிர் தெறிக்க ஓடும் பெண் சிங்கங்களைப் பார்த்தால் அனைவருக்கும் சிரிப்பு ஒருபுறம் வந்தாலும், சிந்திக்கவும் தோன்றுகிறது.

ஒரே ஒரு ஆண் சிங்கத்தைப் பார்த்து, இத்தனை சிங்கங்கள் பறந்தடித்துக் கொண்டு ஓடுவது மரியாதையிலா இல்லை பயத்திலா என்ற கேள்வி எழுந்தால், பயம் இல்லை என்று தோன்றுகிறது.

அரிமா என்று அழைக்கப்படும் ஆண் சிங்கத்தின் கழுத்தில் பிடரி இருப்பது அதன் தனி சிறப்பாகும். பெண் சிங்கங்களுக்கு இப்படி பிடரி இருக்காது.

மேலும் படிக்க | பந்தா காட்டி பல்வு வாங்கிய பாப்பா: வீடியோ பார்த்தா சிரிக்காம இருக்க முடியாது

தலைவரைப் பார்த்து தொண்டர்கள் பம்முவதைப் போன்று தோன்றினாலும், உண்மையில் சிங்க நடை என்ன என்பதை இந்த காட்டு ராஜாவின் நடை காட்டுகிறது.

வயதானாலும் சிங்கம் சிங்கம்தாண்டா என்று சொல்வதைப் போல, இந்த சிங்கம் வீறுநடை போட்டு வருவது பார்ப்பதற்கே அழகாய் பரவசமாய் இருக்கிறது.

சிங்க நடை என்றாலும், சீறும் சிங்கத்தின் உற்சாக நடையைப் பார்த்து சிங்கக் கூட்டமே ஓடி ஒளிவது ஆச்சரியமாக இருக்கிறது.

சில விநாடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோவை பார்த்தால், பல நிமிடங்கள் சிந்திக்கத் தோன்றுகிறது.

மேலும் படிக்க | மலைப்பாம்பா இருந்தா மலைச்சு போயிடுவேனா: கடித்துக் குதறும் முதலை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News