சாரு யாரு தாராளப் பிரபு டோய்..! டெல்லியில் நடந்த விநோத சம்பவம்

Delhi Viral News: இதுபோன்ற சம்பவங்களை படத்தில் கூட பெரிதாக பார்த்ததில்லையே, எப்படி ஒரு மனிதர் அவ்வளவு போதையில் இருந்துள்ளார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Written by - Bhuvaneshwari P S | Last Updated : Jun 13, 2023, 12:47 PM IST
  • மதுபோதையில் மட்டையான நபர்.
  • துணைக்கு வந்த மர்ம ஆசாமி.
  • போதை நபருக்கு வந்த சோதனை.
சாரு யாரு தாராளப் பிரபு டோய்..! டெல்லியில் நடந்த விநோத சம்பவம் title=

டெல்லியில் இளைஞர் ஒருவர் கொடுத்த புகார் தான் தற்போது நாடு முழுவதும் வைரலாகி வருகிறது. அப்படி என்ன புகாரை அவர் கொடுத்தார் அவருக்கு என்னதான் நடந்தது என்பதை கொஞ்சம் திரும்பி பார்க்கலாம்

டெல்லியில் கடந்த சனிக்கிழமை இளைஞர் ஓருவர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தனது கார், 18000 ரூபாய் பணம், லேப்டாப், செல்போன் உள்ளிட்ட பொருட்கள் காணவில்லை என கூறியுள்ளார். என்ன நடந்தது எப்படி திருடு போனது என கேள்வி கேட்ட போலீசாருக்கு  காத்திருந்தது ட்விஸ்ட். டெல்லியை சேர்ந்த 30 வயது இளைஞர் தான் அமித் பிரகாஷ். குருகிராமில் உள்ள கோல்ப் மைதானத்தில் இவர் வேலை செய்து வருகிறார். 

கடந்த வெள்ளிக்கிழமை இரவு வேலையை முடித்துவிட்டு மதுபான பார் ஒன்றுக்கு சென்றுள்ளார் அமித் பிரகாஷ். அங்கு 2000 ரூபாய் மதிப்புள்ள மதுபானத்தை 20,000 ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார். அதன் பிறகு இவர் 2000-க்கு பதில் 20 ஆயிரம் ரூபாய் பணம் ஆன்லைனில் கொடுத்ததை உணர்ந்த கடைக்காரர் மீதி தொகையான 18,000 ரூபாயை கையிலே கொடுத்துள்ளார். அந்த பணத்தை எடுத்துக் கொண்டு தனது காருக்கு மது குடிக்க அவர் சென்றுள்ளார்.

அப்போது அவரிடம் மர்மநபர் ஒருவர் எனக்கும் கொஞ்சம் குடிக்க மதுவை கொடுக்க முடியுமா என்று கேட்டுள்ளார். தாராள மனம் கொண்ட இந்த இளைஞரும் சற்றும் யோசிக்காமல் உடனே ஓகே சொல்ல அந்த நபரும் காரில் வந்து அமர்ந்துள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து செமையாக சரக்கு அடித்துள்ளனர். இதில் அமித் செம போதை ஆகியுள்ளார். இந்த சமயத்தில் தான் அந்த மர்ம நபர் கொஞ்சம் தூரம் காரை ஓட்டிச் சென்றதும் காருக்கு சொந்தக்காரரான அமித் பிரகாஷிடம்,  நீங்கள் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது இறங்குங்கள் என்று அந்த மர்ம நபர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க | ம.பி.யில் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ.1,500: பிரியங்கா காந்தி

இவரும் அது தனது கார் தான் என்பதை சற்றும் உணராமல் காரில் இருந்து இறங்கியுள்ளார். உடனே அந்த மர்ம நபர் கார், லேப்டாப் போன்,  பணம் உள்ளிட்டவற்றுடன் எஸ்கேப் ஆகியுள்ளார். 

இந்த இளைஞரோ இறக்கி விடப்பட்ட இடத்தில் இருந்து ஒரு ஆட்டோவை பிடித்து அருகில் இருந்த மெட்ரோ ஸ்டேஷனுக்கு சென்று, அங்கிருந்து தனது வீட்டிற்கு எப்படியோ பயங்கர மது போதையில் சென்றுள்ளார்.  வீட்டிற்கு சென்று உறங்கியவர் அடுத்தநாள் மதியத்திற்கு மேல் தான் கண்விழித்துள்ளார். அப்பொழுது தான் தனக்கு நடந்ததே அவருக்கு தெரிய வந்திருக்கிறது. உடனே அவர் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் கூறியுள்ளார். அந்த மர்ம நபர் குறித்து இளைஞரிடம் போலீசார் விசாரித்துள்ளனர்.

ஆனால் அவருக்கோ அந்த மர்ம நபர் குறித்து எந்த விதமான தகவலோ அடையாளமோ ஞாபகத்தில் இல்லை. இதனால் போலீசார் என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துள்ளனர். அதோடு அங்கிருந்து அவர் மது அருந்த சென்ற பாரிலிருந்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர். அந்த கார் சென்ற இடங்களையும்,  சிசிடிவி கொண்டு தேடி வருகின்றனர். டெல்லியில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது செய்தியில் வெளியானதுமே நெட்டிசன்கள் தனது பாணியில் அந்த இளைஞரை கலாய்க்க தொடங்கியுள்ளனர்.

 இதுபோன்ற சம்பவங்களை படத்தில் கூட பெரிதாக பார்த்ததில்லையே, எப்படி ஒரு மனிதர் அவ்வளவு போதையில் இருந்துள்ளார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதோடு," நல்ல வேளை அந்த மர்ம நபருக்கு நீங்கள் நன்றி தான் சொல்ல வேண்டும். அந்த காரை மதுபோதையில் ஓட்டிச் சென்று இருந்தால் நிச்சயம் வீடு போய் சேர்ந்திருக்க மாட்டீர்கள். விபத்தில் சிக்கியிருப்பீர்கள்." என்றும் நெட்டிசன்கள் அவரை வசை பாடி வருகின்றனர்.

மேலும் படிக்க | அப்பட்டமான பொய்.... ஜாக் டோர்சிக்கு பதிலடி கொடுத்த மத்திய இணை அமைச்சர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News