நடு ரோட்டில் வீடு கட்ட பாடுபடும் பாம்பு: மிகவும் அரிதான வைரல் வீடியோ

Viral Video: இந்த வீடியோவில், ஒரு சாலை ஓரத்தில் பாம்பு ஒன்று கீழே ஒரு குழிக்கு அருகில் இருப்பதை காண முடிகின்றது. முதலில் அது என்ன செய்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 15, 2024, 02:41 PM IST
  • இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் sunshinecoastsnakecatchers என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
  • இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன.
  • இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
நடு ரோட்டில் வீடு கட்ட பாடுபடும் பாம்பு: மிகவும் அரிதான வைரல் வீடியோ title=

Viral Video: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

காட்டு விலங்குகளில் பாம்புக்கு தனிச்சிறப்பு உள்ளது. இதை கண்டால் அனைவரும் அடுத்த நொடியே அங்கிருந்து ஓடி விடுவார்கள். பாம்பு என்ற பெயரே மக்கள் மனதில் பீதியை உண்டுபண்ணும். பாம்பின் பல வீடியோக்களை நாம் தினமும் இணையத்தில் காண்கிறோம். இவை பல விதங்களில் இருக்கின்றன. பாம்பு பிற விலங்களை வேட்டையாடுவது, பாம்பு மற்றொரு பாம்புடன் சண்டை போடுவது, சாலையை கடப்பது, வீட்டுக்குள் புகுவது, பள்ளியில் பாடம் கற்க வருவது, படம் எடுத்து ஆடுவது என பல வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டுள்ளன. 

அனால், சமீபத்தில் பகிரப்பட்டுள்ள ஒரு வீடியோ மிகவும் வித்தியாசமான ஒரு வீடியோவாக உள்ளது. இதில் பாம்பு தனக்கான பொந்தை தானே உருவாக்கிக்கொண்டு இருப்பதை காண முடிகின்றது. பொதுவாக, எலி, மூஞ்சூர், தவளை போன்றவை மண்ணில் பொந்து அமைப்பதை நாம் பல முறை பார்த்திருப்போம். ஆனால், பாம்பு தன் பொந்தை தானே அமைத்துக்கொள்ளும் இப்படி ஒரு வீடியோ மிகவும் அரிய ஒரு வீடியோ ஆகும். 

இந்த வீடியோவில், ஒரு சாலை ஓரத்தில் பாம்பு ஒன்று கீழே ஒரு குழிக்கு அருகில் இருப்பதை காண முடிகின்றது. முதலில் அது என்ன செய்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. அது அந்த குழியில் எதையோ தேடுவது போல முதலில் தோன்றுகிறது. ஆனால், அதன் பிறகு அது என்ன செய்கிறதென்று புலப்படுகின்றது.  பாம்பு அந்த சாலையோர குழியிலுருந்து மண்ணை அகற்றி தனக்கான பொந்தை உருவாக்கிக்கொண்டு இருக்கின்றது, இதை காண்பதற்கு மிக ஆச்சரியமாகவும், வித்தியாசமாகவும் உள்ளது.

மேலும் படிக்க | இரண்டடி தூரத்தில ரெண்டு புலி! 22 அடி உயரத்திற்கு துள்ளி குதிக்கும் புலியின் இரை ‘கேட்ச்’ வீடியோ வைரல்!

நடுரோட்டில் வீடு கட்டும் பாம்பின் வைரல் வீடியோவை இங்கே காணலாம்:

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் sunshinecoastsnakecatchers என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் அதிக விஷமுள்ள பாம்புகளும், உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பாம்புகளும் இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த வீடியோவும் அங்குதான் எடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு குயின்ஸ்லாந்தின் பாம்பு பிடிப்பவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டது.

மேலும் படிக்க | காட்டுக்கு ராஜான்னாலும் கட்டுப்பாடு இருக்குல்ல! யானையின் குரலுக்குக் கட்டுப்படும் ராஜா குடும்பம் வீடியோ வைரல்...

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News