பிக் பாஸ் புகழ் Raiza wilson-னுக்கு என்ன ஆனது? ஆன்லைனில் கொதித்தெழுந்தார் நடிகை!!

தனது அழகுக்காகவும் மிருதுவான சருமத்திற்காகவும் புகழ் பெற்ற ரைசா வில்சன், ஒரு தோல் நிபுணரின் ஆலோசனையைக் கேட்டு தனது வாழ்வின் மிகப்பெரிய அதிர்ச்சியை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 20, 2021, 02:39 PM IST
  • பிக் பாஸ் புகழ் ரைசா வில்சனுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம்.
  • மருத்துவ நிபுணரின் ஆலோசனையைக் கேட்டு அவதிக்குள்ளானார் ரைசா.
  • தனது கோவத்தை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தினார் ரைசா.
பிக் பாஸ் புகழ் Raiza wilson-னுக்கு என்ன ஆனது? ஆன்லைனில் கொதித்தெழுந்தார் நடிகை!!  title=

சென்னை: தமிழ் சினிமா நடிகையும், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான ரைசா வில்சன் சமீபத்தில் ஒரு பெரும் அதிர்ச்சிக்கு ஆளானார். தனது அழகுக்காகவும் மிருதுவான சருமத்திற்காகவும் புகழ் பெற்ற ரைசா வில்சன், ஒரு தோல் நிபுணரின் ஆலோசனையைக் கேட்டு தனது வாழ்வின் மிகப்பெரிய அதிர்ச்சியை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் வெளுத்து வாங்கிய ரைசா

தனது நிலைமைக்கு காரணமான தோல் மருத்துவரை இன்ஸ்டாகிராமில் ரைசா (Raiza Wilson) வெளுத்து வாங்கினார். அந்த மருத்துவர் தனக்கு தேவையில்லாத தோல் சிகிச்சையை மெற்கொள்ளும்படி தன்னை கட்டாயப்படுத்தியதாக அவர் தனது பதிவில் குற்றம் சாட்டியுள்ளார். இன்ஸ்டாகிராமில் எழுதியுள்ள ஒரு நீண்ட பதிவில், சிகிச்சைக்குப் பிறகான தனது புகைப்படத்தையும் ரைசா பகிர்ந்துள்ளார்.

ரைசா என்ன கூறியுள்ளார்?

ரைசா தனது பதிவில், " ஒரு எளிய முக சிகிச்சைக்காக நேற்று @drbhairavisethil இடம் சென்றேன். எனக்குத் தேவையில்லாத ஒரு சிகிச்சையை மெற்கொள்ளும்படி அவர் என்னை கட்டாயப்படுத்தினார். என் முகத்தின் நிலைமை அதன் விளைவாகும். இன்று என்னைப் பார்க்கவோ அல்லது என்னிடம் பேசவோ அவர் மறுத்து விட்டார். அவர் ஊரில் இல்லை என அங்குள்ள ஊழியர்கள் கூறினார்கள்" என்று எழுதியுள்ளார். 

ALSO READ: முழு கவர்ச்சியில் ரைசா வில்சன்! நீச்சல் உடை வீடியோ வைரல்!

இன்னும் பலர் இப்படி பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்

ரைசாவின் பதிவு வைரலானவுடன் (Viral Post) , தாங்களும் அதே மருத்துவரால், இப்படிப்பட்ட நிலைமைக்கு ஆளாகியுள்ளதாக பலர் அவருக்கு செய்தி அனுப்பியுள்ளனர். Behanced Luxe Dermatol என்ற கிளினிக்கை ரைசா தனது பதிவில் டேக் செய்துள்ளார். மக்களுக்கு அந்த நிறுவனம் குறித்த விழிப்புனர்வை அளிக்கவும், அவர்களை உஷார் படுத்தவும் அவர் இப்படி செய்துள்ளார். டாக்டர் பைரவி செந்தில் என்ற மருத்துவரின் பெயர் இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Razia Wilson's face treatment goes wrong

ரைசாவின் கரியர் பிக் பாஸ் (Bigg Boss) நிகழ்ச்சிக்குப் பிறகு நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. ஓ.டி.டி தளத்தில் வர்மா மூலம் அறிமுகமானார் ரைசா. தி சேஸ், அலைஸ், காதலிக்க யாருமில்லை, எஃப்.ஐ.ஆர் மற்றும் ஹாஷ்டாக் லவ் ஆகிய படங்களில் அவர் தற்போது நடித்து வருகிறார். பிக் பாஸ் 1 நிகழ்ச்சியில் பங்குகொண்ட ரைசா தனக்கென் தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார்.

ALSO READ: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஷகிலாவின் மகள் பங்கேறப்பு- உறுதிசெய்த போட்டோ!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான 

செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News