’தலைக்கு தில்ல பாத்தியா?’ பாம்பு மீது சவாரி செய்யும் தவளை - Viral Video

பாம்பு மீது அமர்ந்து தவளை தில்லாக சவாரி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது  

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 21, 2022, 04:43 PM IST
  • பாம்பு மீது சவாரி செய்யும் தவளை
  • தைரியமாக உடல் மீது அமர்ந்திருக்கிறது
  • இணையத்தில் பரவும் வைரல் வீடியோ
’தலைக்கு தில்ல பாத்தியா?’ பாம்பு மீது சவாரி செய்யும் தவளை - Viral Video  title=

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் கீரிக்கும் மட்டும் இதில் விதிவிலக்கு. ஏனென்றால், எவ்வளவு பெரிய கொடிய விஷம் கொண்ட பாம்பையும், கீரிகள் தில்லாக எதிர்கொள்ளும். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் ஏராளமாக கொட்டிக் கிடக்கின்றன. பாம்புகள் சீண்டிவிட்டாலோ அல்லது வேண்டும் என்றே சீண்டவேண்டிய சூழல் வந்தாலோ கீரிகள் ஒருபோதும் பின்வாங்காது.

மேலும் படிக்க | Snake Video: முட்டையைப் பார்த்தா கோபம் வரலாமா: சீறும் சர்ப்பங்கள்

தில்லாக நேருக்கு நேர் நின்று பாம்புடன் மல்லுக் கட்டும். பாம்பிடம் எத்தனை முறை கடிப்பட்டாலும், பாம்பை பழிவாங்காமல் அந்த இடத்தில் இருந்து கீரிகள் நகராது. ஒரு சொட்டு ரத்தத்தையாவது பார்த்துவிட்டு தான் அந்த இடத்தில் இருந்து நகர்ந்து செல்லும். ஓடியோடி பாம்பைக் கடித்துக் குதறும். அதற்காக கீரிகளைக் கண்டால் பாம்பும் பயந்து ஓடும் என்று அர்த்தமில்லை. அவைகளும் சண்டையிடுவதற்கு தயாராகவே இருக்கும். 

இதனால் பாம்பு - கீரிகளின் சண்டைக்கு இணையத்தில் எப்போதும் வரவேற்பு இருக்கும். கீரியைத் தவிர பாம்பிடம் எந்த விலங்குகளும் மோத ஆர்வம் காட்டாது என்று கூட சொல்லலாம். ஏன், பாம்பு இருக்கும் திசையில் பயணிக்கக்கூட விலங்குகள் அச்சப்படும். அதேநேரத்தில் தவளை உள்ளிட்டவை பாம்புகளின் ஆஸ்தான உணவுகள். இப்படியிருக்க ஒரு பாம்பு மீது அமர்ந்து தவளை ஒன்று ஒய்யாரமாக சவாரி செய்தால் எப்படி இருக்கும்? என யோசித்து பாருங்கள். அந்த தவளைக்கு உண்மையிலேயே தில் இருக்கிற காரணத்தினால் தான் அப்படி செய்ய முடிந்துள்ளது.

மஞ்சள் நிற பாம்பு மீது தவளை ஒன்று ஒய்யாரமாக அமர்ந்து சவாரி செய்கிறது. இந்த வீடியோ இணையத்தில் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகியுள்ளது. 

மேலும் படிக்க | உன்னால நா கெட்டேன்! என்னால நீ கெட்ட! கரடியின் சேட்டை வைரல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News