ஆட்டம் காட்டும் சிறுத்தை; விடாமல் துரத்தும் வனத்துறை- Watch

கோவையில் பாழடைந்த குடோனில் பதிங்கியிருக்கும் சிறுத்தையை பிடிக்க 3வது நாளாக வனத்துறையினர் பொறி (கூண்டு) வைத்து காத்திருங்கின்றனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 19, 2022, 11:10 AM IST
ஆட்டம் காட்டும் சிறுத்தை; விடாமல் துரத்தும் வனத்துறை- Watch title=

கோவையில் பாழடைந்த குடோனில் பதிங்கியிருக்கும் சிறுத்தையை பிடிக்க 3வது நாளாக வனத்துறையினர் பொறி (கூண்டு) வைத்து காத்திருங்கின்றனர். இந்நிலையில் சிறுத்தை நடமாடும் சிசிடிவி காட்சிகளை வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

கோவை (Coimbatore) குனியமுத்தூர், சுகுணாபுரம், கோலமாவு மலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு மாதங்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த மூன்றுவயதுடைய ஆண் சிறுத்தை கடந்த திங்கட்கிழமை சுகுணாபுரம் வாளையாறு சாலையில் உள்ள பாழடைந்த குடோனில் பதுங்கியிருப்பது கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து அந்த பாழடைந்த குடோனை வலை கொண்டு மூடிய வனத்துறையினர் குடோனின் இரண்டு வாயில்களிலும் கூண்டுகள் வைத்து கூண்டுகளில் இறைச்சி மற்றும் நாய்களை கட்டி வைத்து அதனைபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஐந்து காமிராக்கள் மூலம் சிறுத்தையின் நடவடிக்கைகளை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

ALSO READ | Viral Video: பச்சக்கிளி... பியூட்டிஃபுலி! இணையத்தைக் கலக்கும் கியூட் பச்சைக்கிளி!

இதைத்தொடர்ந்து மூன்றாவது நாளாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர் இன்று அதிகாலை நேரத்தில் சிறுத்தை (Animal Video) நடமாடும் சிசிடிவி காட்சிகளை (CCTV Video) வெளியிட்டுள்ளனர்.அதில் அதிகாலை 3:20 மணி அளவில் சிறுத்தை குடோனுக்குள் உலா வருவதும், கேமிராவை உற்றுபார்ப்பதும், கூண்டின் அருகே சென்றுவிட்டு திரும்பவும் பதிவாகி உள்ளது.

 

 

கடந்த இரண்டு தினங்கள் இரவு பகலாக வனத்துறையினர் கூண்டு வைத்து காத்திருந்தும் சிறுத்தை கூண்டுக்குள் அகப்படாமல் போக்கு காட்டி வருகிறது. கூண்டுக்கு அருகில் வரும் சிறுத்தை, புத்திசாலிதனமாக அப்படியே திரும்பி செல்வதும், குடோனைவிட்டு வெளியேற இடம் தேடுவதுமாக உலா வருகிறது. 

இந்த சிறுத்தை, வனத்திலிருந்து மற்றொரு பலம் வாய்ந்த சிறுத்தையால் விரட்டபட்டிருக்கலாம் என கூறும் வனத்துறையினர் ஏற்கனவே கூண்டில் பிடிப்பட்டு வனத்தில் விடுவிக்கப்பட்ட சிறுத்தையாக இருக்க கூடும் எனவும் சந்தேக்கின்றனர். அத்துடன் மயக்க ஊசி செலுத்த முயற்சி செய்தால் குடோனில் உள்ள பொருட்களில் சிக்கி சிறுத்தை காயமடைய வாய்ப்புள்ளதை சுட்டிக்காட்டும் வனத்துறை அதிகாரிகள் காத்திருந்து அதனை கூண்டிலேயே பிடிக்க தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் சிறுத்தை இரு தினங்களாக உணவு அருந்தாமல் ஆக்ரோஷத்துடன் இருப்பதாக கால்நடை மருத்துவர் குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

ALSO READ | Viral Video: இது ‘முட்டை’ இடும் பாம்பு அல்ல; ‘குட்டி’ போடும் பாம்பு..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News