கோவை: கோவை மாவட்டம் வால்பாறை புதுக்காடு பகுதியில் இரு யானைகள் சண்டையிட்டுக்கொள்ளும் அபூர்வ வீடியோ வெளியாகியீருக்கிறது.
வால்பாறை மானாம்பள்ளி வனச்சரகத்தில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு (Anamalai Tiger Reserve) உட்பட்ட பகுதியில் யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இந்த வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் அடிக்கடி புகுந்து பயிர்களையும் நாசம் செய்து வருகின்றன. விலங்குகளை பார்த்து மக்கள் அச்சப்படும் சம்பவங்களும், பல முறை வெளியாகியுள்ளன.
யானைகளை வனப்பகுதியில் பார்ப்பது சுலபம் என்ராலும், அவை தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதை பார்ப்பது அரிது என்பதோடு, ஆபத்தானதும் கூட.
ALSO READ | தாய் யானையிடம் பால் குடித்த 3 வயது சிறுமி- வீடியோ வைரல்
வால்பாறை புதுக்காடு எஸ்டேட் பகுதியில் இரு காட்டு யானைகள் ஆக்ரோஷமாக சண்டையிட்டு கொள்வதை அந்தப் பகுதியில் சென்றவர்கள் பார்த்தனர். யானைச் சண்டையை பார்த்து ரசித்த அவர்கள், அதை வீடியோ எடுத்துள்ளனர்.
அந்த வீடியோக் காட்சிகள், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் இரு காட்டு யானைகள் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக்கொள்கின்றன. அதில் ஒரு யானை விலகிச்செல்ல முற்படுகிறது. மற்றொரு யானை வா...வந்து பாரு..மோதித்தான் பாரு...என்பதை போல மீண்டும் மீண்டும் சென்று மோதுகிறது.
விலகிச்செல்லும் யானையினை வம்பிற்கு இழுத்து சண்டையிடும் சண்டைக்கார யானையின் சேட்டை ரசிக்கக்கூடியதாக இருந்தாலும், சண்டையிடும் யானைகளின் முன் யாராவது நேரடியாக போய்விட முடியுமா?
அரிதினும் அரிதாக கிடைக்கக்கூடிய இதுபோன்ற விலங்கு சண்டைகள், சமூக ஊடகங்களில் வைரலாவது சகஜம். இது கோயம்புத்தூரின் குசும்பு யானைகளின் வீடியோ என்று விமர்சிக்கப்படுகிறது.
ALSO READ | பாய்ந்தது பாம்பு, பக்கத்தில் எலி, பலியானதா எலி? அங்கதான் ஒரு சின்ன ட்விஸ்ட்!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR