இந்தியாவில் திருமண விழா என்றால் பெரும்பாலானோருக்கு சட்டென்று நினைவுக்கு வருவது கல்யாண சாப்பாடு. யாரைக் கேட்டாலும் இதைத் தான் சொல்வார்கள். பலவிதமான ருசியான உணவுகளை ருசித்து உங்கள் மனதுக்கு பிடித்து சாப்பிடும் ஒரு சந்தர்ப்பம் இது.
ஆனாலும், என்ன நடந்தாலும் சாப்பாடு தான் முக்கியம் என்ற நோக்கில் நடந்து கொள்ளுவதை காட்டும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அந்த வைரல் வீடியோவில் தனக்கு பின்னால் பற்றி எரியும் நெருப்பைப் பற்றிக் கூட அவர்கள் கவலைப்படாமல் சாப்பிடுவதை பார்த்தால், அந்த மனிதர்களின் செய்கை நமக்கு வினோதமாகவும், ஆச்சர்யமாகவும் உள்ளதோடு, மனிதர்களின் சுயநலம் இந்த அளவிற்கு உள்ளதா என்ற எண்ணத்தை கொடுக்கிறது.
மகாராஷ்டிராவின் தானேயில் நடந்த ஒரு திருமணத்தில் விருந்தினர்கள், அவர்களுக்குப் பின்னால் திருமண மண்டபத்தின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிவதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து உணவை ருசித்து சாப்பிடுவதை வீடியோ (Viral Video) காட்டுகிறது.
தீ விபத்து ஏற்பட்டால் எல்லாரும் தப்பித்து ஓடுவதுதான் முதல் எதிர் வினையாக இருக்கும் என்றாலும், இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள இரண்டு பேரும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து தங்கள் உணவை ரசித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.
சாப்பாட்டு பறிமாறூம் பகுதியிலிருந்து சில மீட்டர் தொலைவில் தீ பற்றி எரிவதை வீடியோவில் காணலாம். அந்த நேரத்தில், அதற்கு சிறிது தூர தொலைவில் அமர்ந்து சாப்பிடும் இரு ஆண்களில் ஒருவர் தனது இரண்டு முறை திரும்பி பார்க்கிறார். ஆனாலும் கவலைப்படவில்லை. அந்த பெரும் சலசலப்புகளுக்கு மத்தியிலும், அவர்கள் தங்கள் இருக்கைகளில் தொடர்ந்து சாப்பாட்டை ருசித்து சாப்பிடுவது மிகவும் விநோதமான செயலாக உள்ளது.
ALSO READ | Viral Video: மருதாணியை ரவிக்கையாக அணிந்து அசத்திய மணப்பெண்..!!
வீடியோவை இங்கே பாருங்கள்:
Wedding pandal catches fire. The guest is torn between checking it out and gobbling the delicious meal.#bhiwandi
pic.twitter.com/X2w28yKbRi— Musab Qazi (@musab1) November 29, 2021
மகாராஷ்டிராவில் தானே, பிவாண்டியில் உள்ள அன்சாரி திருமண மண்டபத்தின் ஸ்டோர் ரூமில் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. நிகழ்ச்சி நடைபெறும் இடத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த 6 இரு சக்கர வாகனங்களும், சில நாற்காலிகளும் தீயில் கருகின. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
இந்த வீடியோ வைரலாக பரவி, சமூக வலைதள பயனர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது."இந்தியர்கள் இலவச கல்யாண சாப்பாடு ரசித்து சாப்பிடுவதை நெருப்பினாலும் கூட தடுக்க முடியாது." என ஒரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார். மற்றொருவர், "இந்த நபர் தனக்கு வாழ்க்கையில் முக்கியமான விஷயம் எது என தெரிந்து வைத்திருக்கிறார்" என்று கருத்து தெரிவித்தார்.
ALSO READ | சுட்டிக் குழந்தையின் Viral Video: வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது இது தானோ...!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR